Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரங்கராஜ் வருவாராம், குழந்தையை கொடுப்பாராம்" ஸ்ருதி காப்பாற்றுவாங்களாம்! கருமம்! ஜாய் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், அனுப்பிய காதல் மெசேஜின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா, பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் ரங்கராஜை பாதுகாக்க கடைசி வரை போராடுவேன் என கூறியிருந்த முதல் மனைவி ஸ்ருதி பிரியாவை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது.

joy crizilda madhampatti rangaraj chennai

உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி 🙈🙈 so called husband #madhampattyrangaraj என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் நம்பரை Hubby என சேவ் செய்துள்ளதாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியுள்ளார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ், ஓகே தங்கம், லவ் யூ மை பொண்டாட்டி, நாம்தான் சிறந்த தம்பதி. பல வழிகளில் நாம் இருவரும் சரியான ஜோடி என்று காதல் ரசம் சொட்ட சொட்ட ரங்கராஜ் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக ஜாய் தெரிவித்துள்ளார்.

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமண மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை டிஜிபி அலுவலகத்தினர் விசாரிக்கவில்லை என கூறி, மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

அங்கு மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா ஆகியோரை தனி அறையில் வைத்து மகளிர் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். அப்போது மாதம்பட்டி ரங்கராஜ், ஜாயை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டதாக ஜாய் தெரிவித்திருந்தார்.

அது போல் ஜாய்க்கு பிறந்தது தனது குழந்தைதான் என்பதால் அதற்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கத் தேவையில்லை என்றும் ஜாய் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார், அவரை போல் ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என்றெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணை ஆணையத்தில் தெரிவித்ததாக ஜாய் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவற்றை எல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். மேலும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து அது தனது குழந்தை என்றால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என தெரிவித்திருந்தார். மேலும் ஜாய் பணத்திற்காக இப்படியெல்லாம் பழி போடுகிறார் என தெரிவித்திருந்தார்.

இதை மறுத்து ஜாய் கிரிஸில்டா பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஜாய் கூறுகையில், "என்னுடன் ரங்கராஜ் வாழ்ந்த இரு ஆண்டுகளில் அவர் எனக்காக ஒரு தொகையையும் செலவு செய்யவில்லை. நான் இரு நல்ல கார்களை வைத்திருந்தேன். அவர்தான் பிஎம்டபிள்யூ காரை வாங்கி தந்தார். அதற்கு இஎம்ஐ கட்டுவதாக வாக்குறுதியும் அளித்தார்.

தேவையில்லாமல் என்னை கடனாளியாக்கிவிட்டார். பணத்திற்காக நான் அவருடன் பழகியிருந்தால் எதற்காக கோர்ட், கேஸ், காவல் நிலையம்னு நிறைமாத கர்ப்பிணியாக அலையணும், இதனால் எனக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தார்கள். என் குழந்தையின் சாபம், ரங்கராஜையும் அவரது குடும்பத்தையும் சும்மா விடாது" என்றார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-ல் ஜாய் கிரிஸில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக் கொணர்கிறது.

அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்துக்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பதுதான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாக உள்ளது.

joy crizilda madhampatti rangaraj chennai

அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில், "எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.

அந்தக் affirmation-ல் சில பகுதிகள்: பிரிவு 4: என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும். பிரிவு 6: ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும். பிரிவு 8: ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும் மற்றும் ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும். பிரிவு 9: இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும். பிரிவு 12: ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும். இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம்.

பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜ் உடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் இந்த பதிவிற்குத்தான் ஜாய் கிரிஸில்டா, இன்று ஒரு பதிவை போட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+