பச்சை சிக்னல் கிரிஸில்டாவுக்கு? விடாமல் மாதம்பட்டி ரங்கராஜை விரட்டி.. கோர்ட்டில் பகீரை கிளப்பிய ஜாய்
சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்குமாறு நீதிபதியும் உத்தரவிட்டிருந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி ஹைகோர்ட்டில் ஜாய் கிரிஸில்டா பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மாதம்பட்டி ரங்கராஜ், அதே வேகத்தில் சர்ச்சைகளிலும், சலசலப்பிலும், அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கி உள்ளார்.. பிரபல சினிமா காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து திருமணம் செய்து விட்டதாக புகார் கிளம்பி உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்
தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோர்ட்வரை சென்றுள்ளார் ஜாய் கிரிஸில்டா. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கானது பெண்கள் மீதான குற்றத்தை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அந்த பிரிவை சேர்ந்த அதிகாரிகளும், கடந்த வாரத்தில் கிரிஸில்டாவிடம்ஜாயிடம் பல மணி நேரம் விசாரணை செய்தார்கள்.. அப்போது மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததற்கான சில ஆதாரங்களை போலீசில் தந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அவதூறு வழக்கு
இதனிடையே, தன்னை பற்றி அவதூறான வீடியோக்களையும், போட்டோக்களையும் ஜாய் கிரிஸில்டா இணையத்தில் வெளியிட்டுள்ளதால், தன்னுடைய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும்; அந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் டெலிட் செய்ய உத்தரவிடுமாறும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்திருந்த மனுவானது, கடந்த 6ம் தேதி நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், "கடந்த 2013ம் ஆண்டு சமையல் கலை நிபுணர் ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர் தொழிலில் வளர்ச்சியடைந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளரான கிரிசில்டாவுடன் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
ஆதாரம் தந்த ஜாய்
ஆனால், இருவருக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மோசம் செய்துவிட்டதாகவும் கிரிசில்டா பேட்டி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், சமூகத்தில் ரங்கராஜ்க்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தனியாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.
ஜாய் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்.. ஜாய் கிரிஸில்டா தந்த பேட்டிகளால், தன்னுடைய 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மாதம்பட்டி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இருவரின் உறவை மறுக்க முடியுமா
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி செந்தில்குமார், "ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டுகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளதா? தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா?
இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது" என்றுகூறி, மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கிரிஸில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
கருவை கலைக்க டார்ச்சர்
இந்நிலையில், தற்போது ஜாய் கிரிஸில்டா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவே குரல் கொடுத்தேன் என்று மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரை கூறி ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்..
ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த பதில் மனுவில், "2023 டிசம்பர் 24ம் தேதி நாங்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக என்னிடம் ரங்கராஜ் பொய் சொல்லிவிட்டார்.
அநீதிக்கு குரல்
ஏற்கனவே 2 முறை கருவை கலைக்க என்னை அவர் வற்புறுத்தினார். பிறகு 3வது முறையும் கருவை கலைக்க சொன்னார். அதற்கு நான் மறுத்ததுமே, என்னை ரங்கராஜ் துன்புறுத்தினார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவே குரல் கொடுத்தேன்" என்றெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் முன்பு துவங்கி உள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலான வாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications