இந்திய இளைஞர் பலாத்காரம்.. வக்கிரமாக நடந்து கொண்ட பெண் அதிகாரி! சர்ச்சைக்கு நடுவே அனுப்பிய மெசேஜ்கள்
வாஷிங்டன்: ஜேபி மோர்கன் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அத்துமீறல் புகார்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, இந்த பரபரப்புக்கு இடையே பாட்காஸ்டர் ஒருவர், லோர்னாவுடன் லிங்க்டுஇன் தளத்தில் உரையாடியதாகப் பதிவிட்ட ஸ்கிரீன்ஷாட்கள் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நிதி நிறுவனம் ஜேபி மோர்கன்.. இந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது ஜேபி மோர்கன் நிறுவனத்தின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராக இருந்த லோர்னா ஹஜ்தினி மீது, அவருடன் பணியாற்றிய ஒரு ஜூனியர் அதிகாரி பாலியல் மற்றும் இனவெறி புகார்களைத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்திய இளைஞர்
இந்தியாவைச் சேர்ந்த அந்த ஜூனியர் அதிகாரி லோர்னா ஹஜ்தினி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் உடன்படவில்லை என்றால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாக மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் லோர்னா பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
லோர்னா மீதான புகார்கள் டிரெண்டாகி கொண்டிருந்த நேரத்தில், 'மரி ஹில் கை' என்ற ட்விட்டர் யூசர் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது லோர்னா ஹஜ்தினி தனது லிங்க்டுஇன் வட்டத்தில் பல ஆண்டுகளாக இருப்பதை உணர்ந்த அவர், லோர்னாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "ஹலோ லோர்னா... ஜேபி மோர்கனில் உங்கள் அனுபவத்திலிருந்து நான் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் வழிகாட்டுதல் எனக்குத் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென வந்த மெசேஜ்
இந்த பாலியல் புகார் பெரிதாக வெடித்துக் கொண்டிருந்த நேரம் என்பதால் எந்தவொரு பதிலும் வராது என்றே அவர் நினைத்துள்ளார். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, ஏப்ரல் 30ம் தேதி லோர்னாவிடமிருந்து அவருக்குப் பதில் வந்துள்ளது. "உங்கள் ரெஸ்யூமை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்" என லோர்னா பதிலளித்ததாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லோர்னா தனது லிங்க்டுஇன் கணக்கை தற்போது நீக்கியுள்ளார்.
வழக்கின் பின்னணி
பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில் லோர்னா மீது அடுக்கியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.. கடந்த 2024ம் ஆண்டு ஒருமுறை கீழே விழுந்த பேனாவை எடுக்கும்போது லோர்னா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாலியல் இச்சைகளுக்கு இணங்கவில்லை என்றால் கேரியரை அழித்துவிடுவேன் என லோர்னா மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
ஒருமுறை தனது வீட்டிற்கே வந்து லோர்னா அத்துமீறியதாகவும், அப்போது தான் கதறி அழுதபோதும் அவர் நிறுத்தவில்லை என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும், தனது மனைவியையும் வாய்க்கு வந்தபடி பேசியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தமக்குத் தெரியாமல் போதைப்பொருள் கொடுத்து லோர்னா தன்னை தவறாகப் பயன்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறார்கள்
இந்த விவகாரம் குறித்து முதலில் அவர் மோர்கன் நிறுவனத்தின் உள் விசாரணைக்குக் குழுவிடமே புகாரளித்துள்ளார். இருப்பினும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து ஜேபி மோர்கன் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் நடத்திய விசாரணையில் இந்தப் புகார்களில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியான லோர்னாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்தே இருக்கிறார்.
இரு தரப்பும் தாங்கள் சொல்லியே உண்மை எனச் சொல்லி வரும் நிலையில், வழக்கு விசாரணையின்போது தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்!
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications