Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விஷால் வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்.. வேறு அமர்வுக்கு மாற்ற ஆணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். மாற்று அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்திற்கு திரும்ப அளிக்க நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் விஷால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக விசாரித்துள்ளதால், வேறு அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Vishal high court Cinema

நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அவரும் நேரில் ஆஜரான அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். தன்னிடம் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். விஷாலின் இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு அளித்தார். லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குச் செலவு தொகையையும் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார் விஷால். இந்நிலையில் தான், அந்த அமர்வில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+