சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளிர்ந்தது தமிழ்நாடு! இன்று ஒரு இடத்தில் மட்டுமே 100 டிகிரி கடந்த வெப்பம்.. என்ன காரணம் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று பல இடங்களில் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற நிலை மாறி, இப்போதெல்லாம் பிப். இறுதி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதமே பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது.

தலைக்கேறிய கஞ்சா போதை! சாலையில் விரட்டி விரட்டி வெட்டிய 5 பேர்! அடித்து துவைத்து காயப்போட்ட மக்கள்.!தலைக்கேறிய கஞ்சா போதை! சாலையில் விரட்டி விரட்டி வெட்டிய 5 பேர்! அடித்து துவைத்து காயப்போட்ட மக்கள்.!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பம்

வெப்பம்

அதிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக மாறியது. வேலூர், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியின் தாக்கம் உச்சம் தொட்டது. குறிப்பாக நேற்றைய தினம் தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

 ஒரே ஒரு மாவட்டம்

ஒரே ஒரு மாவட்டம்

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அசானி புயல் காரணமாக வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறைந்ததுள்ளது. கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்த நிலையில், இன்று ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்தது.

 அதிகம் எங்கே

அதிகம் எங்கே

அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல தஞ்சையில் 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருச்சியில் 96.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 92.48 டிகிரி பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கத்தில் 93.74 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

 குளிர்ந்தது தமிழகம்

குளிர்ந்தது தமிழகம்

தமிழ்நாட்டில் கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. வரும் மே 28ஆம் தேதி வரை இந்த கத்தரி வெயிலின் தாக்கம் தொடரும். கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அசானி புயல் மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்துள்ளது.

English summary
Only one district records 100 degree farenheit temperature: (தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவான இடம்) Madurai registers 102.56 degree farenheit temperature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X