பராசக்தி படம் பார்த்த மகனின்.. பதிலை கேட்டு அவமானப்பட்டேன்! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: பராசக்தி படத்தை என் மகனுடன் சேர்ந்து பார்த்தேன். அப்போது அவரிடம், தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் குறித்து தெரியுமா என கேட்டேன். அதற்கு என் மகன் தெரியாது என பதில் சொன்னபோது அவமானப்பட்டேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தார்.
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

அப்போது மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச் சுற்று , நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது.
இந்த இறுதி போட்டிக்கு பிறகு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். அவர் பேசுகையில், மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை.
ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில் மொழிகளுக்கான எழுத்துகளை கொண்டவை 200- கூட இருக்காது. அவற்றில் 120- 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது.
அதிலும் 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் 1000 ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைப்படுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.
இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக் கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை.
பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம். கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கிற ஒரே மொழி தமிழ்தான் என நிரூபணமாகியுள்ளது.
ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டும் இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள்.
தமிழன் எந்த மொழியையும் திணிக்கவில்லை. மாறாக விரும்பி படிக்கிறான். வேற்று மொழியை திணித்தால் ஏற்க மாட்டேன். மொழிப் போராட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பராசக்தி படத்தை பார்த்துவிட்டு தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் நடந்தது தெரியுமா என என் மகனிடம் கேட்டேன்.
"தெரியாது" என சொன்ன என் மகனின் பதிலை கேட்டு நான் மிகவும் அவமானப்பட்டேன். மொழி போராட்டத்தை சொல்லிக் கொடுக்காமல் கடமையில் இருந்து தவறிவிட்டேன் என கருதினேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications