சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் இருக்கும் மருத்துவமனைக்கு உதவி செய்ததும், இஐஏ குறித்து நடிகர் கார்த்தி டிவிட் செய்ததும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

    நடிகர் சிவக்குமார் குடும்பத்தில் இருக்கும் மூன்று முக்கியமான நடிகர்களும் தற்போது அரசியல் குறித்த தெளிவுடன் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். நீண்ட காலமாக நடிகர் சூர்யா அரசியல் குறித்து தனது பார்வையை வைத்து வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கை தொடங்கி இந்தி திணிப்பு வரை பல்வேறு விஷயங்களை சூர்யா நேரடியாக எதிர்த்து இருக்கிறார். இது தொடர்பாக பிரபல நாளிதழ்களில் அவர் கட்டுரை கூட எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Azhagu Serial: ஜோதிகா நல்ல முடிவு எடுக்கறாங்க.... நடிகை ரேவதி Azhagu Serial: ஜோதிகா நல்ல முடிவு எடுக்கறாங்க.... நடிகை ரேவதி

    ஜோதிகா எப்படி

    ஜோதிகா எப்படி

    இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சையில் பெரிய கோவில் அருகே இருக்கும் அரசு மருத்துவமனை குறித்து நடிகை ஜோதிகா முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தார். தஞ்சை கோவிலுக்கு சென்று இருந்தேன், அந்த கோவில் அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவிலை பராமரித்த அளவிற்கு அருகே இருந்த அரசு மருத்துவமனையை பராமரிக்கவில்லை.

    பராமரிக்கவில்லை

    பராமரிக்கவில்லை

    அரசு மருத்துவமனைகளுக்கும் கோவிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று ஜோதிகா குறிப்பிட்டு இருந்தார். இவரின் கருத்துக்கு இந்து அமைப்புகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஜோதிகா பேசிவிட்டார் என்று, இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    செம உதவி

    செம உதவி

    இந்த நிலையில்தான் நேற்று தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா நிதி உதவி அளித்துள்ளார். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா அகரம் பவுண்டேஷன் மூலம் இந்த நிதி உதவியை வழங்கி உள்ளார்.

    சூர்யா

    சூர்யா

    ஜோதிகா செய்த இந்த உதவி இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. நேற்று இணையத்தில் 20 மணிநேரம் ஜோதிகா நம்பர் 1 டிரெண்டிங்கில் இருந்தார். தேசிய அளவில் பலர் ஜோதிகா குறித்து பேசினார்கள். ஒரு பக்கம் ஜோதிகா இப்படி தான் செய்த உதவி மூலம் டிரெண்டிங் ஆக இன்னொரு பக்கம் நடிகர் கார்த்தி, முக்கியமான சமூக பிரச்சனை குறித்து நேற்றுக் குரல் கொடுத்து இருந்தார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்படி சுற்றுசூழல் வரைவு தாக்க அறிக்கை குறித்த தமிழ் மொழிபெயர்ப்பை கார்த்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்த டிவிட்டில், இஐஏ வரைவு - தமிழ் மொழிப்பெயர்ப்பு. மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி! படிக்கவும்; பகிரவும்!, என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தமிழ

    தமிழ

    இஐஏ வரைவு அறிக்கை முதலில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வந்தது. இதை தமிழில் வெளியிடவில்லை. இதனால் இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இதை தொடர்பாக பலரும் குரல் எழுப்பிய நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, இந்த வரைவு அறிக்கைக்கான தமிழ் பதிப்பை பகிர்ந்து இருக்கிறார். இதனால் இணையத்தில் அவருக்கு ஆதரவாக, நேற்று பலர் டிவிட் செய்து அவரின் பெயரை டிரெண்ட் செய்தனர்.

    சூர்யா எப்படி

    சூர்யா எப்படி

    முன்னதாக இஐஏ குறித்து சூர்யா செய்த டிவிட்டில், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என்று குறிப்பிட்டு இருந்தார்.

    குரல் கொடுத்தார்

    குரல் கொடுத்தார்

    இஐஏ குறித்து நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் பலர் இதில் மௌனம் காத்த நிலையில், இவர்கள் இருவரும் இதை வெளிப்படையாக எதிர்த்து கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது வெறும் டிவிட்டோடு இல்லாமல், மருத்துவமனைக்கு உதவி செய்வது, இஐஏவின் தமிழ் பதிப்பை பகிர்வது என்று அடுத்தடுத்து கட்டத்திற்கு இவர்கள் மூவரும் சென்று உள்ளனர்.

    English summary
    Jyothika- Surya- Karthi: The stand of the family on social issues gets applause from people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X