சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடமை தவறாத க.அன்பழகன்.. மூக்கில் டியூப்.. சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த தருணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து க.அன்பழகன் வாக்களித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்கை செலுத்தி வருகின்றனர்.

    மதுரையை தவிர்த்து வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

    பளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்! பளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்!

    முதியவர்கள்

    முதியவர்கள்

    இந்த நிலையில் மக்கள் ஆர்வமாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்து வருகிறார். பொதுவாக வாக்குப் பதிவு அன்று தள்ளாத வயதில் உள்ள முதியவர்களும் வாக்களிப்பது வழக்கம்.

    சக்கர நாற்காலி

    சக்கர நாற்காலி

    அந்த வகையில் 96 வயதான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அண்ணாநகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார். மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

    வயது

    அப்போது அவர் தனது வாக்கை பதிவு செய்தார். இந்த வயதிலும் அவரது கடமை உணர்ச்சியை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்தனர். க.அன்பழகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    கடமை தவறாதவர்

    கடமை தவறாதவர்

    கருணாநிதியும் தனது தள்ளாத வயதிலும் இது போல் சக்கர நாற்காலியில் சென்று வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் வழியில் க.அன்பழகனும் வாக்குச் சாவடிக்கு வந்தது அனைவருக்கும் முன்னுதாரணமாகியுள்ளது.

    English summary
    DMK General Secretary K.Anbazhagan cast his vote in Annanagar though he is illness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X