எம்ஜிஆர், ஜெ. பாணியில் ஸ்டாலின் அதிரடி காட்டி அண்ணாமலையை கைது செய்வாரா? கேட்கிறார் கே.சி பழனிச்சாமி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் ஸ்டாலின் கைது செய்து நிரூபிப்பாரா - கே சி பழனிசாமி கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் செய்தது போல அண்ணாமலையை முதல்வர் ஸ்டாலின் கைது செய்வாரா என அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும் இதை பார்த்துவிட்டு பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவது போலவும் சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரப்பியது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வடமாநிலத் தொழிலாளர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். வதந்தி பரப்புவோர் கைது செய்யப்படுவதுடன் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அறிக்கை
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன் தினம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அண்ணாமலை மீது வழக்கு
தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதால் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வதந்தி பரப்பியதாக பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கை முடக்குமாறு தமிழக போலீஸார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வடமாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

திமுகவுக்கு திராணி
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொலியாகவும் வெளியிடுகிறேன். திமுகவுக்கு திராணி இருந்தால், என்னை கைது செய்யவும். பொய் வழக்குகள் மூலம் ஜனநாயகக் குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன். 24 மணி நேரம் அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள். அணி திரள்வோம். அநியாயத்துக்கு எதிராக வென்று காட்டுவோம். இவ்வாறு அண்ணாமலை அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

கே.சி. பழனிசாமி
இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி ஒரு பிளாஷ்பேக் கதையை சொல்லி அண்ணாமலை கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கைது செய்து பார் என்றார் கலைஞர். சிறையில் அடைத்தார் எம்.ஜி.ஆர். தொட்டுப் பார் என்றார் ராமதாஸ். சிறையில் அடைத்தார் அம்மா. முடிந்தால் கை வைத்துப் பார் என்கிறார் அண்ணாமலை. தன்னை நிரூபித்துக் காட்டுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவை சீண்டும் கேசிபி
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகிய இருவரையும் உயர்வாக பேசி திமுகவை சீண்டும் வகையில் கே.சி. பழனிசாமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிப்பது போல் விமர்சித்து திமுகவை வம்பிழுத்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிடுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications