அதிமுக தலைவரா? இல்லை சாதி சங்க தலைவரா? எதை விரும்புகிறார் ஓபிஎஸ்?.. கே.சி.பழனிசாமி கேள்வி
சென்னை: ஓ பன்னீர் செல்வம் அதிமுக தலைவராக விரும்புகிறாரா இல்லை சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கிவிட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிகளை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமாரை நியமித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்ததும் அவரால் நடந்த நியமனங்களும் நீக்கங்களும் செல்லாது என்பதை நிரூபிக்க ஓபிஎஸ் ஒரு பக்கம் பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமானவர்களுக்கே கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளதால் மற்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முக்குலத்தோர் சமூகம்
அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தினர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தினர், ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவை எடப்பாடி தரப்பிடம் இருந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக பல்வேறு தேவர் அமைப்புகளை சேர்ந்த 50 தலைவர்கள் ஓபிஎஸ்ஸுக்கும் சசிகலாவுக்கும் ரகசிய கடிதம் எழுதியுள்ளனராம்.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸும் கட்சியை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனராம். இவர்கள் கடிதம் எழுதி இருவாரங்களாகிவிட்டன. இந்த நிலையில் இந்த கடிதம் குறித்த செய்தி இடம்பெற்றுள்ள ஆங்கில நாளிதழின் கட்டிங்ஸை குறிப்பிட்டு முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதிமுக தலைவர்
அதில் அவர் அதிமுக தலைவராக விரும்புகிறாரா அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா #OPS ? ஏற்கெனவே தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு அதிமுகவின் சாதிய பிளவு வழிவகுக்கும். #MGR & அம்மா வழியில் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும் என அந்த ட்வீட்டில் குறிப்பிடடுள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications