இது அதிமுகவா.. அண்ணாமலை திமுகவா.. கேட்கிறார் கே.சி.பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது அதிமுகவா இல்லை அண்ணாமலை திமுகவா என முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    இது அதிமுகவா.. அண்ணாமலை திமுகவா.. கேட்கிறார் கே.சி.பழனிச்சாமி

    எம்ஜிஆர் காலத்து கட்சி நிர்வாகிகளுள் கே சி பழனிச்சாமியும் ஒருவர். இவர் கட்சி தலைமையை எதிர்த்து கேள்வி எழுப்பியதை அடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஒன்றிணைந்த அதிமுகவை அமைக்க அவர் பாடுபட்டு வருகிறார்.

    இதற்காக அவ்வப்போது கூகுள் மீட்டில் தொண்டர்களுடன் பேசி வருகிறார். இந்த நிலையில் இது அதிமுகவா இல்லை அண்ணாமலை திமுகவா என முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கேள்வி எழுப்பியது ஏன் என்பது குறித்து பார்ப்போம்.

    குன்னூர் மாவட்டம்

    குன்னூர் மாவட்டம்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    காவல் துறை

    காவல் துறை

    அப்போது அவர் மாரிதாஸ் கைதை கண்டித்து பேசியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழக காவல் துறையானது திமுக மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் 120 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்வதற்கும், செல்பி எடுப்பதற்கும் நமக்கு ஒரு டிஜிபி என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    திமுக அரசு

    திமுக அரசு

    இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்தஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

    திமுக அரசு

    திமுக அரசு

    விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், காவல் துறை அதிகாரியாக இருந்த பாஜக அண்ணாமலை ஒரு டிஜிபியை பார்த்து கேட்கிறார். டிஜிபி பதவி உங்களுக்கு எதற்கு? 120 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் மட்டும்தானா என... எங்கே தைரியம் இருந்தால் அண்ணாமலையை திமுக அரசு கைது செய்யட்டும்.

    அண்ணாமலையை தொட்டு பாருங்கள்

    அண்ணாமலையை தொட்டு பாருங்கள்

    அண்ணாமலையை தொட்டு பாருங்கள் என தெரிவித்திருந்தார். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் பேசியிருந்தது கட்சியினரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது அண்ணா திமுகவா இல்லை அண்ணாமலை திமுகவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாரம்பரிய கட்சி

    பாரம்பரிய கட்சி

    50 ஆண்டுகள் பாரம்பரிய கட்சி.. தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்த ஒரு கட்சி... 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு போட்டியாக அதிக லோக்சபா எம்பிக்களை கொண்டிருந்த ஒரு கட்சி.. இப்படி தமிழகத்தில் வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜகவை ஆதரித்து பேசுவது ஏன்? திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை அடைய வேண்டும் என அண்ணாமலை அவ்வப்போது பேசி வருகிறார்.

    சவாரி

    சவாரி

    அவ்வாறெனில் அதிமுக ஒரு பொருட்டாகவே பாஜக மதிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். கூட்டணி தொடரும் என கூறுவது கூட அதிமுக மீது சவாரி செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியையோ, நகராட்சி தலைவர் பதவியையோ, வார்டு கவுன்சிலர் பதவியையோ பெற்றுவிடலாம் என்ற கனவில் அலங்கார வார்த்தைகளாகும். ஏதோ அதிமுக பாஜகவை நம்பியிருப்பது போல் பேசுவது பாரம்பரிய கட்சிக்கு அழகல்ல.

    நீயா நானா போட்டி

    நீயா நானா போட்டி

    ஏற்கெனவே கட்சியில் அதிகார போட்டி, இரட்டை தலைமைகளுக்குள் போட்டி, கோஷ்டி மோதல், நீயா நானா போட்டி என இருந்து வரும் நிலையில் மூத்த தலைவர்கள் பாஜகவை தூக்கி பிடித்து பேசுவதை தொண்டர்கள் விரும்பவில்லை. மோடியா லேடியா என சிங்கம் போல் முழங்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில் வந்த இவர்கள் இன்று பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையை நம்பியிருப்பது வேதனையாக இருப்பதாக கட்சியின் விசுவாசிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+