Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிச்சாமி காலில் "எம்ஜிஆர்" விழுவதா? கே.சி. பழனிச்சாமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் அவரது காலில் விழுந்ததற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அவர் டீ குடிப்பதையும், சைக்கிள் ஓட்டுவதையும் பார்க்கவா ஓட்டு போட்டார்கள்? சீறும் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை தனித்து போட்டியிடுகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் கோ புதூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எம்ஜிஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பூட்டினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டுகளை பெற மேடைக்கு சென்றார்.

    அதிமுக நிர்வாகிகள்

    அதிமுக நிர்வாகிகள்

    இதையடுத்து அவர் எடப்பாடி பழனிச்சாமியின் கால்களில் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தது சரியா என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இதுகுறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர், பேஸ்புக்கில் வெளியிட்ட அவர் கூறுகையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா #எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர்.

    எம்ஜிஆர் வேடமிட்டவர்

    எம்ஜிஆர் வேடமிட்டவர்

    அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்! என தனது கண்டனத்தை கேசி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+