தற்காலிக சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் கு.பிச்சாண்டி... நாளை மறுநாள் முறைப்படி சபாநாயகர் தேர்வு..!
சென்னை: சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்கிறார்.
ஆளுநர் பன்வாரி லால் முன்னிலையில் அவர் பதவியேற்கும் நிகழ்வு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறவுள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் முறைப்படி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை தொடங்குகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன. நாளைய தினம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளார்கள்.
Recommended Video

இதனால் தற்காலிக சபாநாயகராக ஒருவர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உருவானதை அடுத்து கு.பிச்சாண்டி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
இதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர். எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமையானவர். இதனால் இவரையே கூட சபாநாயகராக தேர்வு செய்ய நாளை மறுநாள் அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.
இதேபோல் துணை சபாநாயகர் தேர்வும் நாளை மறுநாளே நடைபெறவுள்ளது. சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு ஆகிய இருவரில் ஒருவர் துணை சபாநாயகர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications