7 பேரும் கொலையாளிகள்தான், நிரபராதிகள் இல்லை.. தமிழக காங்கிரஸ் தடாலடி அறிக்கை
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்கள் கொலைக்காரர்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறோம் என கே எஸ் அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையிலிருந்த பேரறிவாளன் சுமார் 31 ஆண்டுகள் கழித்து இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தீர்ப்பை தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பேரறிவாளனின் வீடு அமைந்துள்ள ஜோலார்பேட்டையில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கே எஸ் அழகிரி ஒரு சர்ச்சை அறிக்கையை கொடுத்துள்ளார்.

கே எஸ் அழகிரி
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

நிரபராதி அல்ல
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் , அவர்கள் நிரபராதி அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என கொண்டாடி வரும் நிலையில் கே எஸ் அழகிரி இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சோனியா மகிழ்வார்
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி எஸ் திருநாவுக்கரசர் கூறுகையில் 31 ஆண்டு கால சட்டரீதியான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இந்த விடுதலை குறித்து ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் மகிழ்வார்கள் என்றார்.

காங்கிரஸ் கட்சியில் முரண்பாடுகள்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு தலைவர்களும் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதே போல் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி எம்பி கார்த்தி சிதம்பரம், அந்த 7 பேரும் தண்டனை காலத்தை தாண்டி சிறையில் இருந்துவிட்டார்கள். அதற்காக சட்டபடி விடுதலை செய்யலாம். ஆனால் அவர்களை ஹீரோக்களாக்க கூடாது என விமர்சித்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications