கோவில்களில் கட்டுப்பாடு இல்லை.. நங்கநல்லூர் அர்ச்சகர்கள் மரணம் பற்றி கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: சென்னை அருகே தீர்த்தவாரியின் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த நிலையில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
கோயில் திருவிழாக்களில் நெறிமுறை கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாததே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
சுமார் 25 பேர் தீர்த்தவாரியில் பங்கேற்றதில் பெரும்பாலானவர்கள் நீச்சல் தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும், குளம் 10 அடி முதல் 40 அடி வரை ஆழம் கொண்டிருந்ததால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் இந்த கோரச் சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் நெறிமுறை கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதை முற்றிலும் தவிர்ப்பதற்கு பாதுகாப்பாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கட்டாயம் அழைக்கப்பட்டு உரிய முறையில் நடத்துவதற்கு தகுந்த ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகைய கோர விபத்தில் பலியான 5 நபர்களின் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications