எடப்பாடி பழனிசாமிக்கு இது தேவையா.. "வெட்கமா இல்லை? இப்டியா மாறுவீங்க".. வீரமணி கேட்ட கேள்வி இருக்கே?
எடப்பாடி பழனிசாமியிடம் கி வீரமணி முக்கிய கேள்வி ஒன்றினை எழுப்பி உள்ளார்
சென்னை: "உங்கள் கட்சியின் பெயர் என்ன? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். உங்கள் கட்சியின் பெயருடன் இணைந்துள்ள அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதோ, அல்லது அதற்கு முன்போ 'தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா? ஏன் சொல்லவில்லை?" என்று எடப்பாடி பழனிசாமியிடம் மூத்த தலைவர் கி.வீரமணி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.
வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, திமுக தரப்பில் வாழ்த்து சொல்லப்படுகிறதா என்று அரசியல் களத்தில் ஆழ்ந்து கவனிக்கப்படும்.
இந்த வருடமும் அப்படித்தான் உற்று கவனிக்கப்பட்டது.. அதை ஒரு கேள்வியாகவே சட்டசபையிலும் எழுப்பப்பட்டுவிட்டது.

நத்தம் விஸ்வநாதன்
பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் கடந்த ஏப்ரல் 4-,ம் தேதி நடந்தது.. அப்போது, அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், 'தமிழ்நாட்டில் மதம் சார்ந்த பண்டிகைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி
உடனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டக்கென எழுந்து, "முதல்வர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்... அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் அவர் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்?" என்று மறுபடியும் அதே கேள்வியை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் எழுந்து, பதில் சொன்னார்.. "இது மதச்சார்பற்ற அரசு.. அதன் காரணமாகவே தங்களது கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் வைத்துள்ளோம்.. திமுக ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல திட்டமிட்டு ஒரு சிலர் சித்தரிக்கின்றனர்... இது திராவிட மாடல் ஆட்சி.. யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்றார்.

கி.வீரமணி
இந்த விவகாரம் உடனே முடிந்துவிடும் என்று பார்த்தால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை என சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய எடப்பாடி பழனிசாமியை நோக்கி நாமும் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம்.

இரண்யாட்சதன்
உங்கள் கட்சியின் பெயர் என்ன? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். உங்கள் கட்சியின் பெயருடன் இணைந்துள்ள அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதோ - அதற்கு முன்போ 'தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா? ஏன் சொல்லவில்லை? காரணம் திராவிடர்களை, 'அசுரர்கள், அரக்கர்கள்' என்று கூறி, கொன்று அழித்த கதை மட்டுமல்ல; 'இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். அதனை மீட்க மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று பூமியை மீட்டார்.

வெட்கமா இல்லையா?
பிறகு பூமாதேவிக்கும் - பன்றி அவதார மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த குழந்தை நரகாசுரன். அவனை கிருஷ்ணர் கொன்றார். அந்த நாள்தான் தீபாவளி என்று பகுத்தறிவிற்கு கொஞ்சமும் பொருந்தாத, மனிதாபிமானத்திற்கும் விரோதமான கதைக்கு 'திராவிட மாடல் ஆட்சி' முதல்வர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா? அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் தனது மதம் 'திராவிட மதம்' என்று சொல்லி உள்ளது மறந்துவிட்டதா? இப்படியா நீங்கள் பாஜகவின் குரலாக மாறுவீர்கள்? - வெட்கமாக இல்லையா?" என்று கேட்டுள்ளார்.. இதற்கு அதிமுக தரப்பில் என்ன பதில் வரபோகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications