பாஜக கூட்டணி.. இதைவிட பெரிய அரசியல் விபத்து எதுவும் இருக்காது! அதிமுகவுக்கு கி.வீரமணி எச்சரிக்கை
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில், "அதிமுக என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பாஜகவுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது" என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அதிமுகவின் மறைந்த தலைவர்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது ஏற்கெனவே அதிமுக-பாஜக இடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில், சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்தது இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் போக்கை தீவிரப்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து பாஜக எதிர்கொள்ள இருந்த நிலையில் இப்படியான அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, "அதிமுக என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பாஜகவுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பாஜகவுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று (18.9.2023) தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன. பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டே திராவிடர் இயக்கத்தையும், ஆட்சியையும், அதன் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அதிமுக தலைவர்களையும் வம்பிழுப்பது போன்று - தனக்குத் தெரியாத பழைய செய்திகளை - யாரோ அரைகுறைகள் எடுத்துத் தந்த ஆதாரமற்ற தகவல்களை 'பாத யாத்திரை'யில் பேசி, ஊடக விளம்பரம் தேடிட முயற்சிக்கிறார்.
விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்த விபரீத வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான பதில்களை அதிமுக மேனாள் அமைச்சர்கள் தருவதோடு, பாஜகவோடு கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது தற்காலிகமா? நிரந்தரமா? மீண்டும் ''சுவற்றுக்கீரையை வழிச்சிப் போடு'' என்று கேட்கும் நிலை ஏற்படுமா? என்பதே கேள்வி. இந்த நிலையில் உறுதியாக இருக்கவேண்டும். அகில இந்திய பிஜேபி இதுகுறித்து எவ்வித மூச்சும் விடவில்லை. ''குட்டி பகை ஆடு உறவு'' என்பதுபோன்ற நிலையை இனியும் அதிமுக எடுக்கலாமா? என்ற கேள்வி எங்கும் பரவலாக உள்ளது!
அதிமுக சகோதரர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்: "சுயமரியாதை என்பது தவணை முறையில் வருவதல்ல; அது நிரந்தரமாக அமைதல் வேண்டும்." தமிழ்நாட்டு அரசியலில் பங்காளியையும், பகையாளியையும் சரியாக அடையாளம் கண்டு, அதற்கேற்ப அரசியல் களம் அமைவதே முக்கியம். பங்காளி உறவு வேறு; பகையாளி நோக்கம் வேறு. நம் இன எதிரிகள் முதலில் அரசியல் ரீதியாக இக்கட்சி, அடுத்து அக்கட்சி என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். பதவி ஆட்சி பலம், பண பலம், புஜ பலம், பத்திரிகை பலம் என்று எல்லா வகை பலத்தையும் பிரயோகிக்க தங்களது அதிகார பலத்தின்மூலம் ஆயத்த நிலையில் உள்ளனர்.
இதற்குப் பிறகும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறவு கொண்டால் - அது மிகப்பெரிய அரசியல் விபத்தே! இந்நிலையில், அதிமுக என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பாஜகவுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது! காலே இல்லாத காவிகள் காலூன்றிட எண்ணுவதே கூட்டுப் பலத்தைக் கணக்கிட்டுதானே! ஆட்டுக்கு மாலை போடும் பூசாரிக்கு, அதன்மீதுள்ள மதிப்பா - கவலையா காரணம்? சிந்தியுங்கள்!" என்று கூறியுள்ளார்.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications