முஸ்லீம் சிறைவாசிகள் பரோல் நீட்டிப்பு! எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! முஸ்லீம் லீக் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முஸ்லீம் சிறைவாசிகள் பரோல் நீட்டிப்பு தொடர்பான தங்கள் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

Kader Mohideen expressed pride that their demand regarding the extension of parole of Muslim inmates has been successful

''முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த முஸ்லிம் சிறைவாசிகளின் நீண்டகால பரோல் இப்போது நடந்திருக்கிறது. அண்ணா பிறந்த நாளில் சிறைச்சாலையில் இருப்பவரை அறச்சாலையாக மாற்றி முன்னதாகவே விடுதலை செய்து மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வந்தார் கலைஞர்.

தந்தையைப் பின்பற்றி தனையனாகி தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் சிறைவாசிகளின் நன்னடத்தை, வயது மூப்பு, உடல்நலக் குறைவு போன்ற அம்சங்களுடன் அவர்களின் நல்ல நடத்தையையும் கவனத்தில் கொண்டு சிறைக் கதவுகளை திறந்து அத்தகையவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்க செய்து வருகிறார்.

இந்த ஆண்டு பொங்கல் விழா நடக்கும் இத்தருணத்தில் மகிழ்ச்சி பொங்கக்கூடிய நற்செய்தியாக தமிழக முதல்வர் அவர்கள் சிறையில் வாடிய முஸ்லிம் சிறைவாசிகளையும்நீண்ட கால பரோலில் விடுவிக்க வழி ஏற்படுத்தி தந்திருக்கிறார். சிறையில் வாடும் வயது முதிர்ந்த முஸ்லிம் சிறைவாசிகளை விடுவித்து உதவிட தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் பல்வேறு தருணங்களில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்துள்ளது.

2023 மார்ச் பத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் பங்கேற்று நிறைவு உரையாற்றிய தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சிறைவாசி விடுதலை கோரிக்கை எழுப்பப்பட்டது. இன்றைய வக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அதற்கான மாநாட்டு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை முஸ்லிம் சமுதாயமே ஏற்றுக் கொண்டு வரவேற்றது. முதல்வர் அவர்களும் ஆவண செய்திட உறுதியளித்து சென்றார்.

தமிழக முதல்வர் அவர்கள் அரசின் தீர்மானமே சிறைவாசி விடுதலையை கோரி ஆளுநர் பார்வைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஆளுநர் அது பற்றி எவ்வித கவனமும் செலுத்தவில்லை. ஆளுநருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அது பற்றியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர் அவர்களிடம் சமுதாயம் சம்பந்தமான இப்பிரச்சனையை சமுதாய பிரதிநிதிகள் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினர். அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் இடம் பெற்றிருந்தார்.

தமிழக முதல்வர் அவர்கள் சமுதாயப் பிரதிநிதிகளின் உள்ளார்ந்த கோரிக்கையை ஏற்று நல்லதொரு முடிவு செய்து அறிவித்து சிறைவாசிகளின் நீண்ட கால பரோலுக்கு பேருதவி புரிந்திருக்கிறார். நீதிமன்றத்தை அணுகும் சிறைவாசிகளை நீண்ட கால பரோல் தந்து விடுவிப்புக்கு வழிகாட்டிய முதல்வர் அவர்களின் இந்த மனிதாபிமான பேருஉபகாரம் பல குடும்பங்களில் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது.

கண்ணீர் வடிந்து கொண்டிருந்த குடும்பங்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து இருக்கிறது. இதயபூர்வமாக தமிழக முதல்வர் அவர்களை இந்த குடும்பங்கள் மட்டுமல்ல சிறுபான்மை சமுதாயமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

சிறைவாசிகளின் குடும்பங்கள் முதல்வரை வாழ்த்துகின்றன. தமிழக முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக முதல்வரை இதயபூர்வமாக வாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தின் தங்கமான முதல்வருக்கு பொங்கும் புகழ் சேர்ப்பதற்கு என்றென்றும் தனது வாழ்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லா சமூகத்து மக்களையும் சமத்துவப் பார்வையோடு அரவணைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான எண்ணங்கள் மென்மேலும் சிறந்தோங்கிட எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.'' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+