முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.. சொன்னதை செய்துவிட்டார்.. காடுவெட்டி குரு மகள் பெருமிதம்
ஸ்டாலினுக்கு காடுவெட்டி குரு மகள் நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் குரு.விருதாம்பிகை நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1987 ல் வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அதிமுக அரசு 21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது. அதுமட்டுமல்லாமல் அன்றைய எம்ஜிஆர் அரசு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைபடுத்தியது.
பிறகு 1989 ஆம் ஆண்டு தமிழினக் காவலர் மு.கருணாநிதி ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை சமூக நீதிப் போராட்டம் என்று உணர்ந்து வன்னியர் சமூகம் மற்றும் சில சமூகங்களை இணைத்து 20 சதவீத ஒதுக்கீடு வழங்கினார்.

ஆட்சி
கருணாநிதி ஆட்சி செய்த அந்த காலக்கட்டத்தில் மக்கள் எந்த போராட்டமும் செய்யாதபோதும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் தானாகவே வன்னியர் மக்கள் நலனைக் கருதி இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் அவர் உயிர் நீத்த தியாகிகளின் 21 குடும்பத்திற்கு தலா 3 லட்சம் பண உதவி மற்றும் அந்த குடும்பங்களுக்கு ஓய்வு ஊதியமும் வழங்கினார்.

இடஒதுக்கீடு
இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு பெற அன்றைய திமுக அரசில் இருந்த வன்னியர் தலைவர்கள் மிக பெரும் பங்காற்றினார்கள். இவ்வாறு கருணாநிதி வன்னியர்களின் போராட்டம் சமூக நீதிப் போராட்டம் என்று அறிந்து வன்னியர்களின் உணர்வுகளை புரிந்து மனதார இந்த அனைத்து விஷயங்களையும் செய்தார். இதேபோன்று இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வன்னியர் சமூக மக்கள் பின்தங்கி இருப்பதை உணர்ந்து வன்னியர் மக்களின் நலனை உயர்த்த அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்.

அங்கீகாரம்
தற்பொழுது கருணாநிதியின் வழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற உடன் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அமல்படுத்த GO(MS)NO.75/2021 என்று அரசாணை வெளியிட்டார் அதுமட்டுமல்லாமல் தற்போது கருணாநிதி வழியில் வன்னியர் போராட்டத்தை சமூகநீதி போராட்டம் என்பதை அங்கீகரித்து இருபத்தொரு உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் நான்கு கோடி செலவில் மணிமண்டபம் கட்ட ஆணையிட்டுள்ளார். மேலும் உயிர் நீத்த 21 தியாகிகளின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மக்கள் நலன்
மு.க.ஸ்டாலின் 7/10/2019 அன்று திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் அதை இன்று சொன்னதை செய்தும் காட்டியுள்ளார். இவ்வாறு கழக அரசு எப்பொழுது அமைந்தாலும் வன்னியர் மக்களின் நலனை கருதி அனைத்து செயல்களும் செய்யப்படுகிறது.

நன்றி
இதுபோன்று வன்னியர் நலனை உயர்த்த பாடுபட்ட தமிழினக் காவலர் மு கருணாநிதிக்கும் அந்த வழியை பின்பற்றி தற்போது செயல்படும் மு க ஸ்டாலினுக்கும் 3 கோடி வன்னியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த அனைத்து வன்னிய தலைவர்களுக்கும் மற்றும் மாவீரன் காடுவெட்டியாருக்கும் நன்றி'' என்று குரு.விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
-
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications