எங்களை கொடுமை படுத்துனாங்க.. பாமகவை எதிர்த்து களமிறங்கும் விருதாம்பிகை.. 23 தொகுதிகளுக்கும் "செக்"!
சென்னை: பாமகவுக்கு எதிராக 23 தொகுதிகளிலும் காடு வெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் மறைவிற்கு பின் அவரின் குடும்பத்திற்கும், பாமக கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக காடுவெட்டி குருவின் குடும்பம் தொடர்ந்து புகார் வைத்து வருகிறது.
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு எதிராக பலமுறை காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பேட்டி அளித்துள்ளார். இன்னொரு பக்கம் பாமகவை எதிர்க்கும் வகையில் குருவின் ஆதரவாளர்கள் மூலம் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை கனலரசன் நடத்தி வருகிறார்.

எப்படி
இவர் பாமகவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போது காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையும் பாமகவிற்கு எதிராக களமிறங்கி உள்ளார். பாமகவிற்கு எதிராக இவர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் பாமகவிற்கு எதிராக விருதாம்பிகை பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பேட்டி
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள விருதாம்பிகை, பாமகவை எதிர்த்து 23 தொகுதிகளிலும் நாங்கள் பிரச்சாரம் செய்ய போகிறோம். அப்பா இறந்த பின் எல்லாம் மாறிவிட்டது. இப்படி நாங்கள் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கொடுமை
அப்பா இறந்த பின் எங்களையே மோசமாக நடத்தினார்கள். அந்த அளவிற்கு எங்களை கொடுமைப்படுத்தினார்கள். அதை பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அதை பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

பாமக
பாமகவுக்கு எதிராக 23 இடங்களிலும் எங்கள் குடும்பம் பிரச்சாரம் செய்யும் என்று விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பாமக போட்டியிடும் தொகுதிகளில் கனலரசன் பிரச்சாரம் செய்கிறார். முக்கியமாக பாமகவின் ஸ்டார் வேட்பாளர்களுக்கு எதிராக இவர் களமிறங்கி உள்ளார்.

வன்னியர்
வன்னியர் வாக்குகளை குறி வைத்து விருதாம்பிகை களமிறங்க உள்ளார். ஏற்கனவே பாமகவிற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் பாமகவிற்கு ஆதரவான வன்னியர் வாக்குகள் பெரிய அளவில் பிரிய வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications