வன்னியர்களும் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பும்-ஜெய்பீம் எதிர்ப்புக்கு பதில் காடுவெட்டி குரு பேச்சு வைரல்
சென்னை: ஜெய்பீம் படத்தை முன்வைத்து கதைக்கு தொடர்பே இல்லாத வன்னியர்களை தவறாக இழிவாக சித்தரித்துவிட்டார் நடிகர் சூர்யா என்கிற ஆவேசம் ஒருபக்கம் வலுத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தமிழகத்தையே உலுக்கி எடுத்த தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் 3 மாணவிகளை உயிரோடு எரித்தது வன்னியர்கள்தான் என்கிற மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பழைய பேச்சு வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு விவாதப் பொருளாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள், தேவை இல்லாமல் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது அந்த மக்களின் குற்றச்சாட்டு. இதற்காக நடிகர் சூர்யா ரூ5 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு எதிராக பாமகவும் வன்னியர்களும் கருத்து தெரிவிப்பதும் விமர்சிப்பதும் சரியானது அல்ல என அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நிற்போம் என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகி வருகின்றன.

காடுவெட்டி குரு பழைய பேச்சு வைரல்
இந்த பின்னணியில் இன்று காலை முதல் மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குருவின் பழைய பேச்சு ஒன்றை வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வன்னியர்களின் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் காடுவெட்டி குரு அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: அன்புமணி ராமதாஸ், சேலம் வழியாகத்தான் வேலூர் போனார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செக்போஸ்ட்டில் நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த வண்டியில் போறவனுங்க கலவரம் பண்ணுறான். அது அன்புமணி ராமதாஸ் வந்த பின்னால் ஏற்பட்ட கலவரம் என்று அவரை கைது செய்ய சென்னை வீட்டுக்கு போலீஸை அனுப்புகிறீர்கள்.

பேருந்தை எரித்த வன்னியர்கள்
கட்சி தொண்டர்கள் எங்கோ கலவரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை பார்த்து கொள்கிறோம். ஆனால் தலைவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது ஜெயலலிதாதான். ஜெயலலிதாவை கைது செய்து சிறையில் வைத்த போது, தருமபுரியில் 3 மாணவிகளை பஸ்ஸில் வைச்சு உயிரோடு கொளுத்துனானே.. அப்போது நானே குற்றவாளி.. என் மீது வழக்கைப் போடுங்கள் என்று ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவுக்காக தருமபுரியைச் சார்ந்த அண்ணா திமுகவைச் சார்ந்த வன்னியர்கள் 5 பேரு இன்று ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறான்; தூக்கு தண்டனை கைதியாக இருக்கிறான். அன்றைக்கு ஜெயலலிதா சிறைக்குப் போன போது 3 மாணவிகளை கொளுத்தியவன் இந்த வன்னியன்தான். வேற எவனும் இல்லை. இவ்வாறு காடுவெட்டி குரு பேசியுள்ளார்.

எல்லைச்சாமி வீரப்பன்
மேலும் சந்தனக் கடத்தல் வீரப்பன், எல்லை சாமியாக நின்று எல்லைப் பகுதியை காப்பாற்றியவர்; அவருக்கு மோரில் விஷம் வைத்து கொடுத்து கொலை செய்தது ஜெயலலிதா. வீரப்பன் என்பது வன்னியர் ஒருவரின் வீர சரித்திரம். அதை வன்னியர்களுக்கு சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? என்றும் காடு வெட்டி குரு பேசியுள்ளார். இதனை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
Recommended Video

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம் என்ன?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது பதவி காலத்தில் அதாவது 1991-96-ம் ஆண்டு கொடைக்கானில் பிளஸன்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி 7 தளங்களை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 1996ல் தி.மு.க. ஆட்சியில் இந்த முறைகேடான அனுமதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி ஜெயலலிதாவுக்கு ஒராண்டு சிறை தண்டனை, ரூ2,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது 5 பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. அதில் ஒன்று தருமபுரி அருகே நிகழ்ந்தது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது தருமபுரி அருகே மாணவிகளை பேருந்துடன் ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாகினர். இவ்வழக்கில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு முதலில் தூக்கு தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டன. கடந்த 2018-ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்தனர். அப்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications