தட்டி தூக்குது தமிழக அரசு.. கைல வேலை இருந்தா போதும்! 3 லட்சத்தை அள்ளித் தரும் அற்புத திட்டம்!
திண்டுக்கல்: தமிழக அரசு சார்பில் கலைஞர் கைவினைத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப் புறங்களில் தச்சு, பானை செய்தல் உள்ளிட்ட வேலை செய்து வரும் மக்களை வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழகத்தில் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று நிலையில் கூடுதல் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கூறியுள்ளார்.

கலைஞர் கைவினை திட்டம்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் "கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) " என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அரசு ஆணை எண். 64, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்: 06.12.2024-இல் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
கைவினைஞர் கடன்
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிக பட்சமாக ரூ. 50,000/- வரை 25% மானியத்துடன் ரூ. 3,00,000/- வரை வங்கி கடன் உதவியும், 5% வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும்.
கைவினை கலைஞர்கள்
கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை பின்னுதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25% மானிய கடன்
இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்காணும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், திட்டம் குறித்த மேலான தகவல்களைப் பெறவும் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண். 0451-2904215, 8925533943 ஆகிய எண்கள் வாயிலாகவோ தொடர்புக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications