"துண்டு" சேருதா? வேலி தாண்டும் எஸ்வி சேகர்?.. அப்ப குஷ்பு.. இப்ப இவரு.. காரணமே கருணாநிதிதான்.. சபாஷ்
சென்னை: பிரபல நடிகர் எஸ்வி சேகர் திமுகவுக்கு வருகிறாரா? அப்படின்னா அங்கே துண்டு போட்டாச்சா? என்ற கேள்விகளுக்கு எஸ்வி சேகரே பதில் தந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியை மேற்கொண்டனர்.

இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருமே பங்கேற்றனர். பேரணி நிறைவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
கலைஞர் நினைவுநாளை திமுகவினர் அனுசரிப்பதும், நினைவுகூர்வதும் இயல்பான ஒன்றுதான்.. ஆனால், இந்த முறை, சில பாஜக புள்ளிகள் கலைஞரை நினைவுகூர்ந்துள்ளதுதான், கவனத்தை திருப்பி வருகிறது. அதில் ஒருவர் குஷ்பு.
குஷ்பு: கோவையில் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்து பேசியிருக்கிறார்.. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியபோதே, "தயவு செஞ்சு பாலிட்டிக்ஸ் மட்டும் கேக்காதீங்க.. மற்ற என்ன வேணுமானாலும் கேளுங்க" என்று சொல்லிவிட்டுதான் பேட்டியை தந்தார் குஷ்பு.
கலைஞர் : அப்போது கலைஞர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.. கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன்... இன்று அவரது நினைவுநாள். காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவுசெய்திருக்கிறேன். கலைஞர் குறித்துப் பேசுவது என்றால் நாள் முழுக்கப் பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள். அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவரைப் பற்றி வேறு தளத்தில் பேசலாம் என்று கூறியிருந்தார்.
மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய “கலைஞர்” நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன். 🙏🇮🇳🙏. இந்த வீடியோ போட்டவுடன் திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா? 1/2 pic.twitter.com/fMKX60qxWC
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) August 7, 2023
குஷ்புவை பொறுத்தவரை யாருக்குமே பயப்பட மாட்டார்.. காங்கிரஸில் இருந்தபோதே, கட்சியின் சரிவு குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தவர். அங்கிருந்து பாஜகவுக்கு வந்துவிட்டபோதும்கூட, திமுகவை விமர்சிப்பாரே தவிர, கலைஞர் மீதான விமர்சனத்தை குஷ்பு இதுவரை முன்வைத்தது கிடையாது.. மாற்று கட்சியில் இருந்தாலும், அவ்வப்போது, கலைஞரை நினைவுகூர்ந்து வருவதை பாஜகவும் கவனிக்காமல் இல்லை.
பாஜக: இந்த லிஸ்ட்டில் பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், பிரபல நடிகருமான எஸ்வி சேகரும் தற்போது இணைந்துள்ளார்.. மாநில பாஜக தலைவருடனான, முட்டல்மோதல் போக்கை சமீபகாலமாகவே கடைப்பிடித்து வரும் எஸ்வி சேகர், நிறைய கிண்டல் ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.
அதிலும், அண்ணாமலையின் பாத யாத்திரையையும் கிண்டலடித்திருந்தார். "கீரை விக்கிற ஆயாவே ஒரு நாளைக்கு 10 கிலோமீட்டர் நடக்கிறாங்க, அண்ணாமலை பின்னாடி நடக்கிற அளவுக்கு நா வெட்டியா இல்லீங்க" என்று எஸ்.வி.சேகர் ட்வீட் போட்டிருந்தார்.
எஸ்வி சேகர் ட்வீட்: இப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, எஸ்.வி.சேகர் இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதில், "மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய "கலைஞர்" நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன். இந்த வீடியோ போட்டவுடன் திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா? போன்ற அல்ப கேள்விகளுக்கு என்னை நன்கு தெரிந்தவர்களிடம் என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என் அரசியல் God Father SRI. MODIJI. MY RAJAGURU IS SRI CHO. THIS IS MY POLITICAL STAND" என்று தெரிவித்துள்ளார்.
நிரூபணம்: மாற்று கட்சியில் இருந்தாலும், கருணாநிதியை பாஜக மூத்த தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அதுமட்டுமல்ல, "நாகரீக அரசியல்" நம்முடைய தமிழகத்தில், மண்ணோடு மண்ணாக மக்கிபோய்விடவில்லை, அது இன்னமும் துளிர்த்து கொண்டுதான் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications