Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தினங்களில் நினைவுக்கு வரும் கருணாநிதி.. அன்றே ஆளுநருக்கு எதிராக சம்பவம்! பாராட்டிய எம்ஜிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் மக்கள் கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கும் சூழலில், மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று தலைநகரங்களில் கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்றுத்தந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா

சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாட்டின் பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர்களுமே கொடியேற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றுவதும், குடியரசுத் தினத்தன்று மாநில ஆளுநர் தேசிய கொடியேற்றுவதும் தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கம் 1974 ஆம் ஆண்டுக்கு முன் இல்லை.

மறுக்கப்பட்ட உரிமை

மறுக்கப்பட்ட உரிமை

அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தன்றும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தார்கள். மற்ற மாநில முதலமைச்சர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பின்பற்றி வந்தனர். ஆனால், கருணாநிதி அப்படி இருக்கவில்லை. அதெப்படி, மக்களால் தேர்வு செய்யப்பட்டவருக்கு கொடியேற்றும் உரிமையை மறுக்கலாம் என்ற கேள்வி அவருக்குள்ளே எழுந்திருக்கிறது.

கருணாநிதி தந்த உரிமை

கருணாநிதி தந்த உரிமை

கடந்த 1969 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய கருணாநிதி, ஆகஸ்டு 15 ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர்களுக்கு தலைநகரங்களில் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று பேசினார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு குடியரசு தினத்தன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றலாம் என்று அரசாணை வெளியிட்டது.

கொடியேற்றிய முதலமைச்சர்கள்

கொடியேற்றிய முதலமைச்சர்கள்

கருணாநிதியின் இந்த கோரிக்கையால் அன்று முதல் இன்று வரை சுதந்திர தினத்தன்று கட்சி கடந்து அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில தலைநகரங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். 1974 ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக சுதந்திர தினத்தன்று தலைநகரில் கொடியேற்றிய முதலமைச்சர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆனார் கருணாநிதி.

Recommended Video

    4வது ஆண்டு நினைவு நாளையொட்டி இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் இல்லம்
    மனதார பாராட்டிய எம்.ஜி.ஆர்

    மனதார பாராட்டிய எம்.ஜி.ஆர்

    "சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதலமைச்சர் கருணாநிதிதான்." என்று முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரே பாராட்டினார். கருணாநிதியை இன்று பலர் பலவாறு விமர்சிக்கலாம். அவரது கொள்கைக்கு நேரெதிர் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு கருணாநிதிதான் காரணம். இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக சுதந்திர தினத்தன்று கொடியேற்றியதும் கடந்த 1969-ல் கருணாநிதி எழுப்பிய முழக்கத்தால்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+