இல்லத்தரசிகளுக்கு தீபாவளி பரிசு..கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி வெளியான குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் தேதி குறித்த விவரமும் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் அளித்து பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்களில் சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Kalaignar Magalir Urimai Thogai amount will be credited to bank account on 10th November due to Diwali

செப்டம்பர் 19ஆம் தேதி முதலே நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்து வந்தனர். அக்டோபர் 25ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்தனர். எனவே செப்டம்பர் மாதம் மட்டுமல்லாமல் அக்டோபர் மாத பட்டியலிலும் மேல்முறையீடு செய்தவர்களின் பெயர் வராமல் போனது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி நவம்பர் மாத உரிமைத் தொகையும் மேல்முறையீடு செய்தவர்களுக்கு வராது என்ற நிலையே உள்ளது. மேல்முறையீடு செய்துள்ளவர்களின் நிலை என்ன, பயனாளர்களாக எப்போது இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கோட்டாட்சியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்தவர்கள் பயனாளர்களாக இணைக்கப்பட்டனரா, அல்லது மீண்டும் நிராகரிக்கப்பட்டனரா என்பது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்த நவம்பர் 25ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 14ஆம் தேதியே பயனாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் வசதிக்காக முன்கூட்டியே உரிமைத் தொகையை வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதேசமயம் மேல்முறையீடு செய்தவர்களுக்கு இந்த முறையும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி தான் மேல்முறையீட்டு மனு குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும் நிலையில் இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் டிசம்பர் மாதம் முதலே உரிமைத் தொகை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+