கலைஞர் மகளிர் உரிமை தொகை.. ஏடிஎம் கார்டு தரப்போறாங்களாமே.. 1000 ரூபாய் எப்போ கைக்கு வரும் தெரியுமா?
சென்னை: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று நேரடி ஆய்வுகள் நடந்து முடிந்த நிலையில், இந்த திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது... எனவே, இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என்பதையும் அரசு அறிவித்திருந்தது.
உரிமைத்தொகை: இதையடுத்து, ஜூலை மாதம் இதற்கான முகாமும் தொடர்ச்சியாக நடந்தது.. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4ம் தேதி முதல் கட்ட முகாம்கள் நடந்து முடிந்தன.. இதில், 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

பிறகு, 2ம் கட்ட முகாம், மறுநாளே அதாவது ஆகஸ்டு 5ம் தேதி தொடங்கப்பட்டு 18ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 2ம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாமை அரசு நடத்தியிருந்தது. இதன்மூலம் 1.63 கோடி விண்ணப்பங்களும் தமிழக அரசுக்கு வந்துள்ளன.
விண்ணப்பங்கள்: சரியான தகவல்களை விண்ணப்பங்களில் மக்கள் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என்று அடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அதன்படி ஆய்வுப்பணிகளும் நடந்து, முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப்பட்டியலும் தயாராகி கொண்டிருக்கின்றன.
பான் கார்டு: இப்படிப்பட்ட சூழலில், வருடத்துக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு இருந்தால், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை, தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விண்ணப்பித்திருந்தால், ஆதார் - பான் கார்டு சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது..
அதேபோல, கார் பதிவு, முதியோர் ஓய்வூதியம் பெறும் விவரமும் ஆதார் மூலம் தெரியவந்துள்ளது.. இப்போது, மின்வாரியம் பயன்படுத்தும் மென்பொருளில் மாற்றம் செய்து, வருடத்துக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளனவாம். அதன்படி, ஒவ்வொரு மின் பகிர்மானம், கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம் வாரியாக, மின் நுகர்வோர் கண்டறியப்படுவார்கள் என்று தெரிகிறது.
3600 யூனிட் மின்சாரம்: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் மின் இணைப்பு கேட்கப்பட்டுள்ளதால், 2020 - 21, 2021 - 22, 2022 - 23ம் ஆண்டுகளில், தலா, 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட, மின் இணைப்பு எண்ணை விண்ணப்பதாரர் குறிப்பிட்டிருந்தால், அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாம்..
முதல்வர் நம்பிக்கை: காரணம், தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது...
இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த திட்டத்தில் இணைய மாநிலம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர்.
வங்கிக்கணக்கு: இப்போது, மாதம்தோறும் உரிமைத்தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும்... அதனால், பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம் என்றும், வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுல்ல, தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான (ATM) ஏடிஎம் கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறதாம்.. ரூபே கார்டாகவும் கிடைக்க போகிறதாம்.. இந்த கார்டு மூலம்தான் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்..
நிவாரணம்: வருகிற 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததுமே, அனைவரது வங்கி கணக்குக்கும் ரூ.1000 சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1-ந்தேதி பணம் கைக்கு வந்துவிடும். குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பகுதி ஆர்டிஓவிடம் சென்று முறையிட்டு நிவாரணம் தேடிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications