தட்டி தூக்குது தமிழக அரசு..தீபாவளி பரிசு காத்திருக்கிறது! மகளிர் உரிமை தொகை எப்போது? வெளியான அப்டேட்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரத்திலேயே அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமை தொகை
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது.
புதிய விண்ணப்பம்
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின்
இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஏறக்குறைய தமிழகத்தின் 70 சதவீத ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இறுதி கட்டமாக மீதமுள்ள இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கிறது.
குடும்ப தலைவிகள்
பெரும்பாலும், பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை ஆகியவற்றுக்காகவே அதிகபட்சமாக மனுக்கள் பெறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மகளிருக்கு தீபாவளி பரிசாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் ஒரு கோடி குடும்ப தலைவிகளிடமிருந்தும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.
1 கோடி விண்ணப்பங்கள்
45 நாட்களுக்குள் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்கள், பிற ஓய்வூதிய திட்டங்களை பெறும் ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியிருந்த நிலையில் கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் முகாம்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
தீபாவளி பரிசு
தற்போது அவற்றை பரிசீலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தீபாவளி பரிசாக அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக நிதி ஒதுக்கிடும் நிதித்துறை மூலமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications