Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. 5000 + 1000! தமிழக அரசின் பொங்கல் பரிசு! யார் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 மாதங்களில் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் பொங்கல் பரிசாக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சொல்லப்படும் நிலையில், மகளிர் உரிமைத் தொகையும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மகளிரின் சமூக நீதி மற்றும் நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் திட்டங்களில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கருதப்படுகிறது. கடந்த 023 செப்டம்பர் மாதம் முதல் முறையாக நடைமுறையில் உள்ள இந்த திட்டம் வெற்றிகரமாக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்றாக, மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் இந்த திட்டம் கருதப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிதி ஒவ்வொரு குடும்ப தலைவிகளின் செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக மேம்படுத்த உதவுகிறது.

Kalaignar Magalir Urimai Thogai

கலைஞர் மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை ஆரம்பித்த தொடக்கத்தில் அனைவருக்கும் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் விதமாக மாற்றப்பட்டதால் சிலர் பயன்பெற முடியாமல் போய் அதிருப்தி எழுந்தது. பின்னர் பயனாளிகளின் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, சிலர் நீக்கப்பட்டனர். தற்போது, மாதந்தோறும் 1 கோடி 14 லட்சம் பயனாளிகள் இந்த தொகையை பெறுகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இதுவரை புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் திட்டத்தில் தவறுதலாக விடுபட்ட தகுதி வாய்ந்த பெண்கள் தொடர்ச்சியாக திமுக அரசின் அமைச்சர்களிடமும், அரசு அதிகாரிகளிடம் புகார் கூறி வந்தனர்.

உங்களுடன் ஸ்டாலின்

இதற்கு பதிலாக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு, தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், இதற்கென தனி இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்காக அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உதயநிதி ஸ்டாலின்

இதுவரை 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காண உள்ளன. இந்த்விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் இரண்டு மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை அனைத்து தகுதி வாய்ந்த மகளிருக்கும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

இதன் மூலம் ஜனவரி மாத தொடக்கத்தில் பொங்கல் பரிசாக மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கள ஆய்வு முடிந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நிச்சயம் பொங்கல் பண்டிகைக்கு உதவித் தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

மேலும் இலவச வேட்டி சேலை ஆகியவையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழ்நாடு அரசு இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தத் தொகையோடு சேர்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகளிர் உரிமைத் தொகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+