கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது? விதிவிலக்கு என்ன? இதோ முக்கிய தகவல்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது, தமிழக மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் இதற்கு ஏராளமான ஆதரவுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், மகளிர் உதவித் திட்டத்தின்கீழ், ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள் யார்? விதிவிலக்குகள் என்னென்ன என்பது குறித்த பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
மகளிரின் தேவையறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. முதிர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்களின் தீவிர பங்கேற்பு மற்றும் அதிகாரமளிப்பு இல்லாமல் முழுமையடையாது.

மகளிர் உரிமை திட்டம்
பல ஆண்டுகளாக, பெண்களின் நிலையை உயர்த்தவும் அவர்களை நன்கு படித்தவர்களாகவும், சுயசார்பு உடையவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்களாகவும் மாற்ற பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி (Global Gender Gap Report-2024) இன் படி, 146 நாடுகளில், இந்தியா 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பாலின பாகுபாடு பெண்களை மிகுந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆளாக்குகிறது.
விவசாயம் மற்றும் வீட்டு வேலை போன்ற குறைந்த கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" என்ற மகத்தான மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார். இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதித் திட்டங்களில் வரலாற்றில் இடம்பிடிக்கும் முயற்சியாகும்.
இந்தத் திட்டம் சுமார் 115 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ.1000/-வழங்குகிறது. தங்கள் குடும்பங்களுக்காக வாழ்நாள் முழுவதும் அயராது உழைக்கும் பெண்களின் கடின உழைப்பை அங்கீகரிக்க இத்திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும். இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மேலும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும்.
மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள் யார்?
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.
- ரூ.25 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- மாநில, மத்திய அரசு ஊழியர்கள் /பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள். உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள். மற்றும் அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள்,/ மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.
-, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் உறுப்பினர்கள். தலைவர்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு சீருந்து, ஈப்பு, டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
விதிவிலக்குகள் என்னென்ன?
- மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன். முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசை சிதைவு நோய் மாற்றுத்திறன். தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை.
- இவ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வரவில்லை எனில் தகுதியானவர்கள். வகைப்பாட்டிலும் விண்ணப்பிக்கலாம்.
- இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர. அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications