“SC/ST நிதியில்.. மகளிர் உரிமை தொகை!” திமுக மீது பாயும் காங்கிரஸ்! உண்மை என்ன?
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பற்றிதான் பேச்சுக்கள் தீவிரமடைந்திருக்கின்றன. பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மட்டும்தான் இந்த விஷயத்தில் ஏழரையை கூட்டும் விதமாக பேசி வருகிறது. குறிப்பாக SC/ST நிதியில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.
"திரும்ப திரும்ப ஆதிதிராவிடர் நிதியில் இருந்தே மகளிர் உரிமை தொகைக்கு நிதி திருப்பி விடப்படுகிறது . அடிப்படை வசதியில்லாத பட்டியல் சமூக மக்களின் உரிமை தொகையை திருடி தேர்தலுக்கு காசு கொடுத்து ஜெயிப்பது தான் சமூக நீதியா திமுக?" என மரிய லாரன்ஸ் எழுப்பிய கேள்வியை ரீ-ட்வீட் செய்த காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி, இது குறித்து RTI மூலம் பெறப்பட்ட தகவல்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

உடன் பிறப்புகள் கொடுத்த விளக்கம்
ஆனால் இந்த தகவல் முழு உண்மை கிடையாது என்று உடன் பிறப்புகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டு வழக்கமானவைதான் என்றும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல் திட்டம் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
"இத்திட்டத்தின்படி பட்டியல் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது SC அல்லது ST மக்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வேறு எந்த வகையிலும் திருப்பி செலுத்தப்பட மாட்டாது. இதில் இரண்டு கூறுகள் உள்ளன divisible மற்றும் non divisible. பொது திட்டங்களில் SC/ST பயனாளிகள் இருப்பின் அவர்களின் விகிதத்துக்கு ஏற்ப வளர்ச்சி சார்ந்த நலத்திட்டங்களுக்கு இந்த நிதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. SC/ST மக்களின் சிறப்பு திட்டங்களுக்கான நிதி முழுமையாக அவர்களுக்கே போய் சேரும்.
மகளிர் உரிமைத் தொகை
இதில் மகளிர் உரிமைத் தொகை divisible welfare திட்டத்தின் கீழ் வருகிறது. RTI தகவலில் இருப்பது இந்த திட்டத்தில் எவ்வளவு நிதி SC/STக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தானே ஒழிய, இவர்கள் சொல்வது போல அவர்களுடைய நிதியை எடுத்து பொது திட்டங்களுக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதாக இல்லை.
நாம் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு 'பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பபடும் பட்டியல் சமூக நிதி' அது நிகழாத வண்ணம் கண்காணித்து நெறிப்படுத்தவதற்காக கொண்டு வரப்பட்டதே இந்த சட்டம்.
நீண்ட கால செயல் திட்டம்
இந்த சிறப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து ஓரு ஆண்டு தான் ஆகியிருக்கிறது. இன்னும் பல பணிகள் இருக்கிறது. இது ஒரு நீண்ட கால செயல்திட்டம். இந்த மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை உள்ள அனைவருடைய கூட்டு முயற்சி அவசியம். சந்தர்ப்பவாதிகளுடைய குற்றச்சாட்டுகளை புறம் தள்ளி ஆக்கப்பூர்வமான செயலாக்கங்களுக்கு துணை நிற்போம்" என ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
-
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications