மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக "சிறப்பு முகாம்.." இதையும் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்காக நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பில் ஒன்று மாதம் தோறும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம். திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சித்து வந்தது. ஒருபக்கம் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இத்தகைய சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, இதனை பெற தகுதி வாய்ந்த பெண்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டது.
1.48 கோடி விண்ணப்பங்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது கட்ட முகாம், 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற்றன. இரண்டாவது கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இரண்டு கட்ட முகாம்களும் முடிந்து விட்ட சூழலில், விடுபட்ட சிலர் இனி எப்படி விண்ணப்பிப்பது என கவலை அடைந்தனர்.
விடுபட்ட நபர்களுக்காக: இந்த நிலையில் தான் தமிழக அரசு அசத்தலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இதுவரை விண்ணப்பிக்காத விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாமில், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் , ஏற்கனவெ முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாம்கள்: இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் அமைப்பு சாரா நலவாரிய திட்டம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதிய திட்டம் பெறக்கூடிய குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் இல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் சிறப்பு முகாம்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications