Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை.. யாரும் தடுக்க முடியாது.. வங்கிக்கணக்கில் நிச்சயம் வரும்.. முதல்வர் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதில் எந்த தவறும் நடைபெறாது என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்றார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பப்பதிவு முகாமை தருமபுரியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் , நேரத்தில் குடும்பத் தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Kalaignar Magalir Urimai Togai no one can stop it will definitely come to the bank account Says CM Stalin

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாமை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் , மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி;தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கி வைக்கப்பட்டது. நிதி நெருக்கடி இருந்தாலும் இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம். அடுத்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்றார். தமிழ்நாட்டு பெண்கள் தன்னம்பிக்கையோடும், சுய மரியாதை உணர்வுடனும் வாழவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொய்களை, வதந்திகளை பரப்பி இத்திட்டத்தை சிலர் கொச்சைப்படுத்த முயன்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

யாருக்கெல்லாம் 1000 ரூபாய் தேவையோ அவருக்கு இந்த பணம் கிடைக்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கு கலைஞரின் பெயரை வைத்துள்ளேன். எல்லா பணிகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் போய் சேர வேண்டும். வருகிற செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும். இதனை யாரும் தடுக்க முடியாது இதில் எந்த தவறும் நடைபெறாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+