கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. உங்க வங்கி கணக்கு முடங்கிவிட்டால்.. எப்படி பணம் பெறுவது? புது வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களிடம் வங்கி கணக்கு இல்லாத பட்சத்தில், வங்கி கணக்கு செயல்படாத நிலையில் இருக்கும் பட்சத்திலும் எளிதாக மகளிர் உரிமை தொகை கணக்கை தொடங்க முடியும்.

இதற்கு இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. உங்களிடம் வங்கி கணக்கு இல்லாத பட்சத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அதற்கான தனி முகாம் உள்ளது. அங்கேயே வங்கிகள் முகாமிட்டு உள்ளன. அங்கேயே புதிய வங்கி கணக்குகளை தொடங்க முடியும்.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

மகளிருக்கான உரிமைத் தொகை

அதுவே வங்கி கணக்கு செயல்படாத நிலையில் இருக்கும் பட்சத்திலும் எளிதாக மகளிர் உரிமை தொகை கணக்கை தொடங்க முடியும். நீங்கள் உங்கள் பழைய கணக்கை கொடுத்துவிட்டால், ஒருவேளை அது செயல்படாமல் இருந்தால் வங்கிகளில் அதை செயல்படுத்த சொல்லி விண்ணப்பம் அளிக்கலாம். பின்னர் அதை உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லது தாலுகா அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது என்றும், வெறும் ஐந்து ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. மகளிர் உரிமைத் தொகைக்குத் தகுதி இருந்தும் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியை அளித்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் அக்டோபர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 109 முகாம்கள் செயல்படும். இம்முகாம்கள் மூலம் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும், உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இம்முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். முகாமிற்கு வந்த சில பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். "நாங்கள் இங்கு வந்தவுடன், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை அவர்களே கொடுத்து, எங்களுக்காக அதை நிரப்புகிறார்கள். மேலும், எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிப்பதால், வேலைகள் சுலபமாக முடிந்துவிடுகின்றன," என்று அவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+