கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: 250 பக்க சார்ஜ் ஷீட் தாக்கல்
சென்னை: கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா நடன கல்லூரி. கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கல்லூரி படிப்பு போல் இளநிலை, முதுநிலை பட்டமாக ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 4 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா மாணவிகள் புகார் கூறியிருந்தனர்.

இந்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதது. மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது.
இதையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கைது செய்தனர். பாலியல் புகார் தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீசார் நேரடியாக விசராணை நடத்தினர். இந்த நிலையில் தான் 250 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் இன்று சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications