"சேர்ந்து சதி பண்றாங்க".. பதறும் கலாஷேத்ரா ஹரி பத்மன்.. பரபர ஜாமீன் மனு.. இன்று விசாரணை
சென்னை: கலாஷேத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி அழுத்தம்.. பொருளாதார ரீதியிலான பின்புலம் கொண்ட திமிர்.. அரசியல் ரீதியாக இருக்கும் சிலரின் ஆதரவு.. அதிகார தொனி.. பெண் கொடுமை என்று பல பிற்போக்கு விஷயங்களின் கூடாரமாக கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வந்தது இந்த புகார்களின் மூலம் தெரியவந்துள்ளது .

4 ஆசிரியர்கள் அங்கே இருக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் மாணவிகளுக்கு இந்த பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் பல முறை புகார் அளித்தும் அதில் எல்லாம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. திருவான்மியூரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது.
இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் உட்பட 4 பேர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக புகார் கொடுத்த மாணவிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போது ஆசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில்தான் தற்போது ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு உள்ளார். மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியது மட்டுமின்றி ஜாதி ரீதியாகவும் கடுமையாக தாக்கி வந்துள்ளார் ஹரி பத்மன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனக்கு எதிராக பொய்யாக புகார் வைக்கப்படுகிறது. திட்டமிட்டு சிலர் இதை பரப்புகின்றனர் என்று சென்னை கலாஷேத்ரா கல்லூரி ஹரி பத்மன் பதிலடி கொடுத்துள்ளார். அதோடு என் கணவர் நிராபராதி.. எங்களுக்கு குடும்பம் உள்ளது. எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என்று அவரின் மனைவியும் பதில் அளித்துள்ளார். இரண்டு பெண் பேராசிரியர்கள் பொறாமையின் பெயரால் இப்படி செய்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கலாஷேத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும். நடன துறையின் தலைவர் ஜோஸ்லின் மேனன் தவறு செய்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கே மாணவிகள் இரவு முழுக்க போராட்டம் நடத்திய நிலையில் அதிகாலையில் பலர் மயங்கி விழுந்தனர். இந்த விவகாரம் பற்றி பிக்பாஸ் பிரபலம் நடிகை அபிராமி பேசி இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதில், என்ன பிரச்சனையோ.. என்ன புகாரோ.. அந்த விவகாரம் நடந்த போதே சொல்ல வேண்டும். பொதுவாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் நான் முதல் ஆளாக குரல் கொடுத்து இருக்கிறேன். கலாஷேத்ராவில்தான் நானும் படித்தேன். இதில் ஒரு சிலர் பேசுகிறார்கள். ஒரு பக்கத்துக்கு ஸ்டோரியை மட்டும் நாம் பார்க்கவே கூடாது. இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். நிறைய பேர் ஒரு பக்க ஸ்டோரியை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை வருடமாக.. கிட்டத்தட்ட 89 வருடமாக அங்கு குற்றம் எதுவும் நடக்கவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications