அது வேற வாய்.. மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் எடப்பாடியை விமர்சித்த கலாநிதி வீராசாமி
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது போன்ற நகர்வுகளால் திமுக களத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அன்றைக்கு ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்குவதே சாத்தியமில்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி 2,000 வழங்குவேன் என கூறுகிறார் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய கலாநிதி வீராசாமி எம்பி, "5,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை கொடுத்தது எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கின்றனர். பிப்ரவரி, மார்ச்சில் அறிவிப்பு வெளியாகி ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும். மே மாதம் முடிவுகள் வெளியாகும். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அது வேற வாய்
மீண்டும் திமுக ஆட்சியமைந்தவுடன் ரூ.2,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தலைவரும் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் சொல்லியிருக்கிறார். கடந்த 2021 தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கூறினோம். அப்போது அதிமுக ஆட்சியில் ரூ.1,000 மட்டுமே கொரோனா நிதி வழங்கினார்கள்.
நிதி இல்லை என்று எடப்பாடி பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கினோம். இப்போது நாங்கள் ரூ.5,000 கொடுத்துவிட்டோம். அன்றைக்கு எடப்பாடி மாத மாதம் ரூ.1,000 கொடுக்க முடியாது என்றவர், இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 கொடுப்பேன் என்று அதே வாயால் சொல்கிறார்.
வட சென்னை வளர்ச்சி திட்டம்
இதை செயல்படுத்தும் திறனும், ஆற்றலும் யாருக்கு இருக்கிறது, யார் ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். கோடை கால சிறப்பு தொகையாக, மே மாதத்தில் ரூ.2,000 கொடுப்போம் என்பதை இப்போதே உறுதிபடுத்திவிட்டோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடரும்.
வட சென்னைக்காக திமுக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வட சென்னை பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதி என்பதால், வட சென்னை வளர்ச்சி திட்டம் என்பதை அறிவித்து முதலமைச்சர் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உங்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிறார்.
மீண்டும் ஆட்சி
நம் குழந்தைகள் வளர்ந்து உயர்கல்வியில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்பதற்காக தான் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவை மூலம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறார். எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நல்லது செய்வேன் என்று சொல்லித்தான் தலைவர் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். அதை இப்போதும் செயல்படுத்து வருகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்வார்" என்றார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications