சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த.. கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை
அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... இவர் கோயில் அர்ச்சகர் சாமிநாதன் என்பவரது மகள் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.. முறைப்படி சவுந்தர்யா வீட்டில் பெண் கேட்டும் அவர்கள் மறுத்துள்ளனர்.. அதனால், காதலியை சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார் பிரபு.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சவுந்தர்யாவின் அப்பா, இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை... அதனால் கல்யாணத்தன்று பெட்ரோலை உடம்பில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.. பிறகு கோர்ட்டுக்கு சென்று மகளை மீட்டுத் தரும்படி கேட்டார்.

ஆனால், பெண் மேஜர் என்பதாலும், அவரது முழு சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது என்பது உறுதியானதாலும், கணவருடனேயே சவுந்தர்யாவை சேர்த்து வைத்தது நீதிமன்றம்.. இப்படி சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது பிரபுவின் திருமண விவகாரம்.
இந்நிலையில், பிரபுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.. தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.. தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினருக்கும், பிரபுவின் ஆதரவாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications