கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மறு பிரேத பரிசோதனைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்
அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

144 தடை உத்தரவு
பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மறுபிரேத பரிசோதனை
மனுவை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார்.

அமைதியான முறையில் இறுதிச்சடங்கு
இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவிதின் தந்தை வழக்கறிஞருடன் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மறுபிரேத பரிசோதனை
மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு படையை உருவாக்க டிஜிபி க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை குறித்து ஜூலை 29ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். இந்த நிலையில் மாணவியின் உடல் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவியின் தந்தை மனுவை நாளை விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் என்றும் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

போலீஸ் குவிப்பு
மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் மாணவி தந்தை தரப்பு மருத்துவரை நியமிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு மருத்துவமனை வளாகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளி வளாகம் முன்பும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications