வீர, தீர செயல்புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது..ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த ஒரு பெண் கல்பனா சாவ்லா விருதினை பெற தகுதியுடையவராவர்.
சென்னை: துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த ஒரு பெண் இந்த விருதினை பெற தகுதியுடையவராவர்.
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பயணம் செய்து பூமிக்குத் திரும்பும்போது அகால மரணமடைந்த இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டு தோறும் தமிழக அரசு வீரச் செயலுக்கான விருதினை வழங்கி வருகிறது. அந்த விருது பெற தற்போது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது"ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும்.
சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான"கல்பனா சாவ்லா" விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த ஒரு பெண் இந்த விருதினை பெற தகுதியுடையவராவர்.இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.
தகுதியுடையவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-9க்கு வருகிற 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications