வாய் நிறைந்த சிரிப்பு.. அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பில் கமல்ஹாசன், சந்தானம்.. வைரல் படங்கள்
சென்னை: பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கமல்ஹாசன், சந்தானம் போன்ற நடிகர்களும் கலந்து கொண்டனர்.
Recommended Video
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும், சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த பூ.தனசேகரன் - கலைவாணி தம்பதியினரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் சென்னையில் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சங்கமித்ரா மற்றும் ஷங்கர் பாலாஜி தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

ஆளுநர், முதல்வர்
தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், டாக்டர் கலாநிதி வீராசாமி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கமல்ஹாசன் பங்கேற்பு
இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சந்தானம்
இதேபோல, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தினத்தந்தி நாளிதழ் குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்கள் வடிவேல், சந்தானம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கட்சி மாறுபாடு தாண்டி
அரசியலில் பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும் கூட அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்களும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் அன்புமணி ராமதாஸிடமும், நடிகர் சந்தானம் டாக்டர் ராமதாசிடம் சிரித்து பேசியபடி இருக்க கூடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக சுற்றி வருகின்றன.












Click it and Unblock the Notifications