முன்னேற்றத்தில் கோட்டை.. கொரோனாவில் 8-ம் இடத்திலிருந்து 2வது இடத்தை எட்டி பிடித்த தமிழகம்.. கமல்
சென்னை: முன்னேற்றத்தில் முதலிடத்தில் இல்லாமல் கொரோனா பாதிப்பில் 8ஆவது இடத்தை தமிழகம் எட்டிப் பிடித்துவிட்டது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் 50 முதல் 150 வரை உயர்ந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு தற்போது நாளொன்றுக்கு தமிழகத்தில் 200 முதல் 600 வரை உள்ளது. இதனால் 9200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8ஆவது இடம்
நாளையோ நாளை மறுநாளோ 10 ஆயிரத்தை தாண்டிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பில் 2ஆவது இடம், 3ஆவது இடத்தில் தமிழகம் இருந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தமிழகம் 8ஆம் இடத்தில் இருந்தது.

2ஆவது இடம்
இப்போது மீண்டும் தொடர் பாதிப்புகளால் 8ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னேற்றம்
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.

டாஸ்மாக்
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு #தாங்குமாதமிழகம் என கமல்ஹாசன் கேட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்ததால் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications