பெரும் எதிர்பார்ப்பில் தேர்தலின் "கதாநாயகன்".. விஸ்வரூப ஹீரோவின் வாக்குறுதிகள் என்ன?..
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று வெளியாகவுள்ள தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை பெரிதும் கவர்கிறது என்றால் அது தேர்தல் அறிக்கைதான். கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகவும் வைரலானது. இலவச கலர் டிவி, குறைந்த விலையில் ரேஷன் அரிசி உள்ளிட்ட திட்டங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்த தேர்தலில் திமுக வென்றது. அது போல் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கைதான் உண்மையில் கதாநாயகன் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தனது ஆட்டத்தை அதில் ஆரம்பித்தார்.

இலவச மிக்ஸி
20 கிலோ இலவச அரிசி, இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்களை அள்ளி தெளித்தார். பின்னர் அமோகமாக வென்றது அதிமுக. அதிலிருந்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் ஜெயலலிதா அதிக கவனத்தை செலுத்தினார். தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கும் தேர்தல் அறிக்கையை இன்று மக்கள் நீதி மய்யம் வெளியிடுகிறது.

அதிக கவனம்
பொதுவாக நீட் தேர்வு, மதுபானக் கடைகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான தாக்குதல், வாக்குக்கு பணம் கொடுப்பது, பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் மீதான சுமை, மக்களுக்கான இன்னல்களை கண்டித்து கமல்ஹாசன் குரல் கொடுத்து வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என அறிவித்த திட்டத்தை திமுக காப்பியடித்துவிட்டதாக கமல் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய தேர்தல் அறிக்கை அதிக கவனம் பெறுகிறது.

கமல்ஹாசன் முடிவு
இந்த தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளுக்கு கமல்ஹாசன் ஒரு முடிவு கட்டுவார் என்றே தெரிகிறது. அது போல் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்த்து போராடுவது குறித்து இடம்பெற்றிருக்கும். எழுவர் விடுதலை குறித்து ஏதாவது இடம்பெற வாய்ப்பிருக்கலாம். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு தனித் துறை உருவாக்குவது, சுற்றுச்சூழல் பாதிப்பு, வடசென்னைக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறப்படும் சாலை திட்டங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை எதிர்ப்பது குறித்து இருக்கலாம்.

அலைக்கழிப்பு
மேலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகள், தனது கட்சியின் செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கியது போல் அரசு செயல்களை பொதுமக்கள் எந்த பணிகள் அலைக்கழிக்கப்படுகிறார்களோ அவையெல்லாம் டிஜிட்டல்மயமாக்க வாய்ப்புகள் உள்ளன.

தேர்தல் அறிக்கை
பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு தீர்வு காணும் முயற்சி, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி குறித்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம். லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியை நடத்துவது, ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில வழிவகை செய்யும் திட்டம், மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு தொகுதிகளில் மக்களின் கோரிக்கைகளை பெற்ற நிலையில் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவை கமலின் தேர்தல் அறிக்கையில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அனைத்து தரப்பினருக்குமான நல்ல திட்டங்களை அவர் அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications