சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேள்வி மேல் கேள்வி.. வேட்பாளர் தேர்வில் கமல் ஸ்டிரிக்ட்.. மநீம இப்படித்தான் இன்டர்வியூ நடத்துகிறது

மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை துருவியெடுக்கும் மக்கள் நீதி மய்யம்- வீடியோ

    சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

    லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் இந்த இரண்டு தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    கமலுக்கு சின்னம் ஒதுக்கியதுக்கே பாஜக இப்படி பதறுதே.. தேர்தல் முடிஞ்சதும் என்னென்ன ஆக போகுதோ!கமலுக்கு சின்னம் ஒதுக்கியதுக்கே பாஜக இப்படி பதறுதே.. தேர்தல் முடிஞ்சதும் என்னென்ன ஆக போகுதோ!

    இன்று தேர்வு

    இன்று தேர்வு

    இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள். இதற்காக சென்னையில் அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. 40 தொகுதிக்கு விருப்பமனு தெரிவித்தவர்களுக்கும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

    கடுமை

    கடுமை

    இந்த நேர்முக தேர்வு மிகவும் கஷ்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட, முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து நேர்முக தேர்வை நடத்தினார்கள். எல்லோரும் மாற்றி மாற்றி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.

    பல கேள்விகள்

    பல கேள்விகள்

    பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டியிட போகும் தொகுதியின் விவரம், களநிலவரம், அரசியல் அறிவு, போட்டியிடும் தொகுதியில் உள்ள பிரச்சனை. மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டால் என்ன செய்வீர்கள், இதற்கு முன் செய்த நற்காரியங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இதில் கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கிறது.

    மார்க் கொடுத்தனர்

    மார்க் கொடுத்தனர்

    இந்த கேள்விகளுக்கு அவர்கள் கொடுக்கும் பதிலை வைத்து 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்கள். அதன்பின் அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களை வைத்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல் பின்புலத்தை விட, அரசியல் அறிவு குறித்தே அதிக முக்கியத்துவம் இதில் கொடுக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

    English summary
    Kamal Haasan' Makkal Needhi Maiam chooses its candidates with high cautions for Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X