உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?.. தனது ஸ்டைலில் கமல் கேட்ட கேள்வி.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மாலை 6 மணிக்கு துவங்கிய மழை இப்போதும் விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில் சென்னையில் இப்போதும் மழை விடாமல் பெய்து வருகிறது.

Kamal Haasan raises the questions on Bus Conditions amid Heavy rain in Chennai

இதனால் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. கனமழை காரணமாக பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில இடங்களில் பேருந்துகளில் மழை நீர் ஒழுகும் அவலம் கூட ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பேருந்துகள் இப்போதும் மோசமான நிலையில் உள்ளது. பேருந்துகளின் இந்த மோசமான நிலை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

அதில், புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

Kamal Haasan raises the questions on Bus Conditions amid Heavy rain in Chennai

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?

பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?, என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பேருந்துகளில் இருக்கும் குறைகளை களையுமா என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்ப வைக்க தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+