ஆண்டவரே என்ன இது! காலில் விழுவது தப்பாம்! ஆனா கை கொடுக்க போனா இப்படி செய்கிறாரே! கமல் செய்வது சரியா
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களைச் சந்தித்த நிலையில், அப்போது அவர் செய்த காரியம் இணையத்தில் பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த நவ. 7ஆம் தேதி தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இப்போது பல்வேறு படங்களிலும் படுபிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கு நடுவே தனது மக்கள் நீதி மய்யம் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறது. இதற்கிடையே கமல் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கமல் செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கமல்: நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் சமீப காலங்களில் வந்த முக்கியமான படம் என்றால் "விக்ரம்" எனச் சொல்லலாம். தமிழ் சினிமாவில் வசூலில் புதிய சாதனையைப் படைத்தது. அதன் பிறகு கமல் படுபிஸியானார். ஒரு பக்கம் ஹெச் வினோத்தின் படத்தைத் தொடங்கவுள்ள கமல், மறுபுறம் மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்திலும் கவனம் செலுத்துகிறார். மேலும், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திலும் சிம்பு, சிவகார்த்திகேயன் என இளம் நடிகர்களை வைத்து படங்களையும் தயாரித்து வருகிறார். இதெல்லாம் போக பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கு நடுவே மக்கள் நீதி மய்யம் கட்சியையும் நடத்தி வருகிறார். கமல் கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார். இந்த இரு தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் கூட, எந்தவொரு தொகுதியிலும் அவர்களால் வெல்ல முடியவில்லை.
மக்கள் நீதி மய்யம்: குறிப்பாக 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனே நேரடியாகக் களமிறங்கினார். இருப்பினும், அதில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலரும் திமுக தொடங்கிப் பல கட்சிகளில் இணைந்தனர். மேலும், தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடும் சில காலம் குறைந்தது.
இடையில் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது என்று அவரது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. குறிப்பாக ஈரோடு தெற்கில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நேரடியாகப் பிரசாரமும் கூடச் செய்தார். இது வரும் காலத்தில் அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது போல இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பரபரப்பு: இதற்கிடையே கடந்த நவ. 7இல் கமல் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் தனது ரசிகர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்த ரசிகர்கள் காத்திருந்து கமலை சந்தித்தனர். அவருக்குப் பிடித்தது போலவே பலரும் கமலுக்குப் புத்தங்களைப் பரிசாக அளித்தனர். ஆனால், அப்போது கமல் செய்த காரியம் தான் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதில் ஆர்வமாக வந்த ரசிகர் ஒருவர் கமலுக்கு கை கொடுக்கப் போனார். கை கொடுக்க மறுத்த கமல் வணக்கம் மட்டுமே தெரிவித்தார். கமலுக்கு கை கொடுக்க வேண்டும் என ஆர்வமாக இருந்த அந்த ரசிகர், சில நொடிகள் வரை அப்படியே இருந்தார். இருப்பினும், கமல் திட்டவட்டமாக அதை மறுத்தே விட்டார். இதனால் அந்த ரசிகர் சோகமாக அங்கிருந்து அப்படியே சென்றுவிட்டார். இதுதான் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது சரியா: காலில் விழ வேண்டாம் அது அடிமைத்தனம் என்று சொல்லும் கமல்.. கை கொடுக்கப் போனால் அதை மறுக்கிறார். கை கொடுப்பது அனைவரையும் சமமாகப் பார்க்கும் செயலாக இருக்கும் போது இதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், இது மட்டுமின்றி இடையில் இந்த பிக்பாஸ் கேங்கும் ஜஸ்டிஸ் பார் பிரதீப் எனக் கிளம்பியுள்ளனர். இதனால் கமலின் சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications