திமுகவின் போராட்டத்தில் முதல் முறையாக கை கோர்க்கும் கமல்ஹாசனின் மநீம!
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிசம்பர் 23-ல் நடைபெறும் திமுக தலைமையிலான பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க உள்ளது. திமுக தலைமையிலான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக பங்கேற்கிறது.
சென்னையில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் டிசம்பர் 23-ல் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்ர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவின் சென்னை பேரணியில் பங்கேற்போம் என்றார்.

கமலுக்கு அழைப்பு
இந்நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவினர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

திமுக போராட்டத்தில் கமல்
இதனை கமல்ஹாசன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து டிசம்பர் 23 பேரணியில் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மநீம
திமுகவின் பேரணியில் மநீம முதல் முறையாக பங்கேற்கிறது. அண்மையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மநீம உச்சநீதிமன்றத்துக்கு முதலில் சென்றது. இதனைத் தொடர்ந்து திமுகவின் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அரசியலில் திருப்புமுனை?
தற்போது மநீமவும் திமுகவும் கை கோர்த்து பேரணியில் பங்கேற்க இருக்கின்றன. ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கை கோர்க்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட அரசியல் சூழ்நிலையில் திமுகவுடன் கமல்ஹாசன் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications