கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி ட்வீட்!
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்" என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

அந்த பட்டியலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களம் இறங்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசனுக்கு சென்ற முறை கோவை லோக்சபா தொகுதியில் அதிகவாக்குகள் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் போட்டியிடவில்லை.
இதனிடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications