MP Kamal : "விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்!" கமல்ஹாசன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
சென்னை: நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "விழுமிய முறைமையுடன்" உறுதி கூறுகிறேன் என குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட "விழுமியம்" என்ற வார்த்தை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கமல் என்றாலே அவரது வார்த்தைகளில் புதுமையும் இலக்கிய நடையும் இருக்கும்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது.

காலியாக இருந்த 6 இடங்களுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 4 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.
மக்களவை தேர்தல்
அந்த வகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுதி அளித்ததைப் போல, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசனை அக்கட்சியினர் ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.
3 பதவிகளுக்கு யார்யார்
அதுபோல, மற்ற 3 பதவிகளுக்கு திமுக சார்பில் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், பி. வில்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேரும் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
வாழ்த்து
இதையடுத்து அவர்கள் அவையை நடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்துகளைப் பெற்றனர். 4 பேரும் தமிழிலேய உறுதிமொழி ஏற்றனர். அப்போது கமல்ஹாசன் தனது உறுதிமொழி வாசிப்பில், "மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்" எனத் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.
விழுமிய முறைமையுடன்
கமல்ஹாசன் தனது உறுதிமொழியில் "விழுமிய முறைமையுடன்" எனக் குறிப்பிட்டிருந்தாரே, அப்படி என்றால் என்ன எனப் பலர் இணையத்தில் தேடி வருகிறார்கள். "விழுமியம்" என்றால் ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் நம்பிக்கைகள், கருத்துகள், கொள்கைகள் மற்றும் நடத்தைகள் ஆகும். விழுமியங்கள் ஒரு நபரின் வாழ்க்கையை வழிநடத்துகின்றன, மேலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வழிகாட்டியாக உள்ளன.
விழுமியம் என்றால் என்ன
அதாவது மதிப்புடன், முறையாக என்ற பொருளும் உண்டு. ஒரு செயல் அல்லது நடத்தையைச் செய்யும்போது, அந்தச் செயல் அல்லது நடத்தையை ஒரு குறிப்பிட்ட விழுமியத்தின் அடிப்படையில், முறையாக, ஒழுக்கத்துடன் செய்வது ஆகும். அதாவது தனிமனித ஒழுக்க, சமூக விழுமியங்கள், நடத்தை ஆகியவற்றை குறிக்கிறது.
ஆரோக்கியமான சமூகம்
இந்த விழுமியத்தின் முக்கியத்துவம் என்னவெனில், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட உதவுகின்றன, தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன, சமூகத்தில் நேர்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன, சமூக மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், விழுமிய முறைமை என்பது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க நான் முக்கியப் பங்காற்றுவேன் என்பதாகும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications