சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல் பேசியது சரியா.. சர்ச்சையானது ஏன்.. சலசலப்பை ஏற்படுத்திய வார்த்தை பிரயோகம்!

கமல்ஹாசன் பேசிய சர்ச்சை பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    சென்னை: கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் முஸ்லீம் தீவிரவாதம் என்று ஒரு தரப்பு பேசி வருவதை அடிப்படையாக வைத்தே கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையில் எடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறுகிறார்கள்.

    தீவிரவாதத்திற்கு நிறம், மொழி, இனம் கிடையாது. யார் தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும் அதை எந்த மதமும் ஏற்காது என்பது பொதுக் கருத்தாக உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லீம் தீவிரவாதி என்ற பதத்தை தொடர்ந்து இந்துத்வா அமைப்பினர் உரக்க கூறி வருகின்றனர், பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில்தான்கமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்து வந்து சேர்ந்துள்ளது.

    மக்களே ஹேப்பி நியூஸ்.. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! மக்களே ஹேப்பி நியூஸ்.. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

    மூவர்ணகொடி

    மூவர்ணகொடி

    அரவக்குறிச்சியில் நேற்று பேசும்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளு பேரன். அந்த கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியே இருக்கும். இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்" என்றார்.

    பாஜக

    பாஜக

    கமலின் இந்த பேச்சுதான் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது. இதற்கு பாஜக தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கமலை கிழித்து விளாசி தள்ளுகிறது. கமல் பேசியது சரியா, தவறா என்ற வாதத்துக்குள் சென்றால், அதற்கு விடை கிடைக்காது. ஆனால் இஸ்லாமியர்கள் நிறைந்திருக்கும் பள்ளப்பட்டியில் நின்றுகொண்டு கமலின் பேச்சு இப்போதைக்கு தேவையா, தேவையில்லையா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.

    அபாய பேச்சு

    அபாய பேச்சு

    சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற கமல் இப்படி பேசியிருந்தால் அது முற்றிலும் தவறே! ஏனென்றால், இறையாண்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை இது அசைத்து பார்ப்பது போலவே அமைந்துவிடுகிறது. என் மதத்தை பேசினால் உன் மதத்தை பேசுவேன் என்ற ஒத்தைக்கு ஒத்தை வாதத்துக்கும் இட்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு

    இலங்கை குண்டுவெடிப்புக்கு இதுவரை கமல் என்ன கருத்து சொல்லி உள்ளார் என்று சீமான் அன்று கேள்வி எழுப்பியதும் இப்போது நினைவுக்கு வருகிறது. இப்போது நடந்த குண்டுவெடிப்புக்கு கருத்து சொல்லாமல், என்றைக்கோ நடந்த பயங்கரவாதத்தை நினைவுபடுத்தி பேசுவது எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    அதேசமயத்தில் கமல் இன்றைக்கு இப்படி பேச காரணம் யார்? இதே பாஜகவேதான்! எதற்கெடுத்தாலும் நேரு, இந்திரா, ராஜீவை குறை சொல்லி வருவது இன்றுகூட பிரதமர் மோடியின் பேச்சில் தெரிகிறது. இன்னொரு பக்கம், காந்தியை சுட்ட கோட்சேவுக்கு கோயில்கட்டி கும்பிடும் வேலையும் நடக்கிறது.

    எந்த வகையில் நியாயம்?

    எந்த வகையில் நியாயம்?

    இதே இந்து மகா சபையை சேர்ந்த ஒரு பெண் சாமியார், காந்தியை பொம்மை துப்பாக்கியால் சுட்டு, இனிப்புகள் வழங்கியதன் உள் அர்த்தம் என்ன? இதனை பாஜக இன்றுவரை கண்டிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. கோட்சே செய்ததும் கூட ஒரு தீவிரவாத செயல்தான். அந்த தீவிரவாதத்தை இந்து அமைப்பினர் பூஜிப்பதை அவர்கள் நிறுத்தாத நிலையில் கண்டிக்காத நிலையில், கமல் பேசியதை கண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    மொத்தத்தில் அவர்கள் சொன்னார்கள்.. பதிலுக்கு இவரும் சொன்னார் என்ற வகையில்தான் என்று கமல்ஹாசனின் கருத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து அதன்படி செயல்பட்டால் மட்டுமே மனிதம் தழைக்கும்.. மதவாதம் அடியோடு அழியும்.

    மதவாதம் ஒழியும்

    மதவாதம் ஒழியும்

    மொத்தத்தில் அவர்கள் சொன்னார்கள்.. பதிலுக்கு இவரும் சொன்னார் என்ற வகையில்தான் என்று கமல்ஹாசனின் கருத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து அதன்படி செயல்பட்டால் மட்டுமே மனிதம் தழைக்கும்.. மதவாதம் அடியோடு அழியும்.

    English summary
    Kamalhasans controversy speech in Aravakurichi Campaign about Hindus terrorism
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X