டீல் ஓவர்?.. ஸ்டாலின் + விசிக + கம்யூ + காங் + பாமக?... "அவங்க" வேற திமுக பக்கம் வர்றாங்களாமே.. ஆஹா
எடப்பாடி பழனிசாமிக்கு நெளிவு சுழிவு தெரியவில்லை என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்
சென்னை: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி உள்ள நிலையில், அந்த கூட்டணி எப்படிப்பட்டதாக அமையும் என்று கணிப்புகளும், விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.. அந்தவகையில், பாஜகவை பகைத்து கொண்டு, எடப்பாடியால் கூட்டணி வைக்க முடியாது என்கிற கருத்துக்களையும் ஓபிஎஸ் தரப்பில் உதிர்த்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தீர்ந்தால் மட்டுமே, கூட்டணி வலுவடையும் என்ற நிலை உள்ளது.. அப்படி இருக்கும்போது, மெகா என்று எதை முன்னிறுத்தி எடப்பாடி பேசினார் என்ற சந்தேகம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

பச்சமுத்து
அநேகமாக, டிடிவி + பாஜக + பாமக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரையும் ஒன்றிணைக்கலாம் என்ற முடிவுடன் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.. மற்றொருபக்கம் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துள்ளதாலும், பாஜகவை கழட்டிவிட்டே தேர்தல் கூட்டணியை அமைப்பார் என்றும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, பிரபல சேனல் ஒன்றுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான அழகு மருதுராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

விஜயகாந்த்
அந்த பேட்டியில் எடப்பாடி சொன்ன அந்த மெகா கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது: "யார்கூட எடப்பாடி கூட்டணி வைப்பார்? முதல்ல எந்த இயக்கமும் இவருடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை.. இன்னைக்கு வரைக்கும் பாமக, அதிமுக கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியவில்லை.. திமுக? அதிமுகவா? என்ற நிலை மட்டுமே அன்றைய அரசியலில் இருந்தது.. ஆனால், இப்போது சாதாரணமாக 5 சதவீத வாக்குகளை பெறக்கூடிய மநீம, நாம் தமிழர் என்று பல இயக்கங்கள் வந்துவிட்டன..

2 % TO 4%
இன்றைய தினம், வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்தும் கட்சிகள் என்று பார்த்தால் விசிகவை சொல்லலாம்.. காங்கிரசுக்கு எப்போதுமே 9 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது.. இரண்டரை முதல் 4 சதவீதம், கம்யூனிஸ்ட் வாக்குகளையும் சொல்லலாம்.. கம்யூனிஸ்ட்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எப்போதுமே யாருக்குமே தெரியாது, ஆனால், தேர்தல் சமயத்தில் கரெக்ட்டா வந்து வாக்குகள் விழுந்துடும்.. கோவை, மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, திருவாரூர், வடசென்னை. எண்ணூர், வில்லிவாக்கம் இப்படி கம்யூனிஸ்ட்கள் இருக்காங்க.. 40 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3 அல்லது 4 பாராளுமன்ற தொகுதிகளை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் கம்யூனிஸ்ட்கள் இருக்காங்க..

முளைத்த மநீம
ஆக, வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் திமுகவிடம் உள்ளன.. வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் இடத்தில் இப்போது முளைத்த மநீமய்யமும், திமுக பக்கம் போக வாய்ப்புள்ளது.. நாம் தமிழர் தனியாத்தான் நிப்பாங்க.. அப்படியானால் அதிமுகவை தாங்கி பிடிப்பதற்கு, வாக்கு வங்கியை உறுதிப்படுத்தக்கூடிய கட்சிகள் எங்கே இருக்கிறார்கள்? இருந்தது பாமக மட்டும்தான்.. அவங்களும் கூட்டணியை முறித்து கொண்டு போய்விட்டார்கள்.. எந்த கருத்தும் இதுவரை அவர்கள் பேசவில்லை.. பாஜக மட்டும்தான் அதிமுகவை காப்பாற்ற பேசிக் கொண்டிருக்கிறது.. அந்த கட்சியும் வேண்டாம் என்றால் எப்படி?

நடிகர்கள்தான் வருவார்கள்
எடப்பாடி சொல்லும் அந்த மெகா கூட்டணியில் யார் வருவார்கள்? போண்டாமணியும், வையாபுரியும் வரலாம், சினிமாவில் வேண்டுமானால் யாரையாவது உருவாக்கி, அதன்பிறகு கூட்டணிக்கு அழைத்து வரமுடியும்.. மெகா கூட்டணிக்கு வாய்ப்பே இல்லையே.. மறுநாளே தினகரன் சொல்கிறார், திமுகவை எதிர்க்க, அந்த மெகா கூட்டணியில் நாங்களும் இருப்போம் என்கிறார்.. உடனே எடப்பாடி, ஒரு சதவீதம்கூட தினகரனுக்கு வாய்ப்பில்லை என்கிறார்.. நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா?

கூடாரங்கள்
காங்கிரஸை வீழ்த்துவதற்கு, முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கூடாரம் என்று தெரிந்தும் ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைக்கவில்லையா? புரட்சித்தலைவரை நீக்கியபோது, எம்ஜிஆர் போட்டோவை ஒட்டினால்தான், ரோட்டில் வாகனங்களே செல்லக்கூடிய நிலைமை இருந்தது.. அப்படிப்பட்ட செல்வாக்கின் உச்சம் தொட்ட எம்ஜிஆர், கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலில் நிற்கவில்லையா? 1996-ல் அம்மா தோற்கிறார், அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடந்தது, அதிலும் அதிமுக தோற்றுவிட்டது.. சிறைக்கு போகிறார், வெளியே வருகிறார்.. 1998 பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருந்தது..

தாயகம்
இதனால் அம்மா, அப்போது ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் சென்றாரே.. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், எக்மோரில் மதிமுக அலுவலகம், ஒரு தொகுதி பெற்ற வாழப்பாடி ராமமூர்த்தியின் அடையாறு வீட்டுக்கு சென்றார்.. புரட்சித்தலைவியே, வெற்றியை உறுதி செய்வதற்காக, மாற்று கருத்துக் கொண்ட இயக்கங்களை எல்லாம் போனார்.. மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் எப்போதாவது ஒத்து போகுமா? எவ்வளவு கொள்கை முரண்பாடுகள் உடைய கட்சிகள் இவை? வைகோ செய்யாத விமர்சனமா அம்மாவை.. அந்த வைகோவின் அலுவலகத்துக்கும் அம்மா போனார்.. ஆட்சியை தன்வசப்படுத்த வேண்டும் என்று சொன்னால், நெளிவு சுழிவு அரசியலில் அவசியம்.. அது எடப்பாடிக்கு இல்லை" என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications